கபசுரக் குடிநீரை யார் எவ்வளவு பருகலாம்?

0
508

நாம் அனைவரும் பரவலாக கபசுரக் குடிநீர் எடுத்துக் கொள்கிறோம். இதை எடுத்துக்கொள்வதிலும் ஒரு முறை இருக்கிறது.

கபசுரக் குடிநீரை தொடர்ந்து மூன்று நாள்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் 20 நாள்கள் இடைவெளிவிட்ட பின்னரே, மீண்டும் தொடர்ந்து 3 நாள்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

நினைவிருக்கட்டும்…. மருந்தும், விருந்தும் மூன்று நாள்களுக்குத்தான். எந்த மருந்தையும் 3 நாள்கள், மருத்துவர் பரிந்துரையின் பேரில் அதிகபட்சமாக 5 நாள்களுக்கு மேல் தொடர்ச்சியாக எடுக்கக்கூடாது.

குழந்தைகள் 10-15 மிலி அளவும், பெரியவர்கள் 30-50 மிலி அளவும் எடுத்துக்கொள்ளலாம். இந்த அளவை மீறி அதிகமாக எடுத்துக்கொள்ளும்போதும், குறைந்த இடைவெளியில் எடுத்துக்கொள்ளும் போதும் கல்லீரல் பாதிப்படையும்.

எதை எடுத்துக்கொண்டாலும் அளவு என்பது மிகவும் முக்கியமானது. உங்கள் வயது, உடல்நிலைக்கு ஏற்ற அளவு குறித்து, அருகில் உள்ள மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்.