மற்றொரு வகை கோரோனா வைரஸ் இலங்கையில் கண்டறிவு

0
472

கோரோனா வைரஸின் மற்றொரு புதிய வகை இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வல்லுநர் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த வீரியம் கூடிய புதிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது என அவ் பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நீர்பீடணம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

ஐக்கிய இராச்சியம், டென்மார்க், ஐஸ்லாந்து, ஜேர்மனி மற்றும் சுவிஸர்லாந்து ஆகிய நாடுகளில் பரவி வரும் வைரஸ் இனத்தை சேர்ந்த B.1.258 என்ற புது வகை வைரஸே இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் இது குறித்த நாடுகளில் தற்போது பரவி வரும் புதிய வைரஸ் வகையை சேர்ந்ததல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த வைரஸின் தொற்று வீதம் அதிகமாக காணப்படுவதுடன் தற்போது அதிகளவில் பேசப்படும் இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்காவில் பரவும் வைரஸ் வகையை விட வேறுபட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.