இந்தியாவில் இருந்து 13 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி மருந்து

0
363

இந்தியாவில் இருந்து 13 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி மருந்து ஏற்றுமதி செய்யப்படுவதற்காக உலக சுகாதார நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது.

உலகில் பல நாடுகளில் கொரோனா தடுப்பூசி மருந்து பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட நாடுகள் தடுப்பூசி மருந்துகளை உருவாக்கியுள்ளன. அதேபோல இந்தியாவும் தடுப்பூசி மருந்துகளை கண்டுபிடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.

தற்போது இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசி மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. இந்தியாவில் கடந்த 16ஆம் தேதி முதல் பொது மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

பிரேசில், வங்காள தேசம், பக்ரைன், பூட்டான், மாலைத்தீவு, மொரீசியஸ், மங்கோலியா, மொராக்கோ, மியான்மர், நேபாளம், ஓமன், சிசெல்லஸ், சிறிலங்கா ஆகிய 13 நாடுகளுக்கு இந்தியா தடுப்பூசி மருந்தை ஏற்றுமதி செய்கின்றது.

மாலைத்தீவு, பூட்டான், வங்காளதேசம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கு இலவசமாகவும் மருந்துகள் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு பல நாடுகளுக்கு மருந்துகளை அனுப்பி உதவி செய்து வருவதால், உலக சுகாதார நிறுவனம் இந்தியாவுக்கும், பிரதமர் மோடிக்கும் பாராட்டு தெரிவித்துள்ளது.