பதற்றத்தில் இருக்கிறார் பால் தினகரன்

0
610

கோயம்பத்தூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது “இயேசு அழைக்கிறார் என்னும் அமைப்பு. 1986-ம் ஆண்டு டி.ஜி.எஸ்.தினகரனால் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, ‘காருண்யா’ நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தை நடத்திவருகிறது.

தினகரன் இறந்த பிறகு அவரின் மகன் பால் தினகரனும், அவரின் குடும்பத்தினரும் கிறிஸ்துவ மதப் பிரசார நிகழ்ச்சிகளோடு சில நிறுவனங்களையும் நடத்திவருகிறார்கள்.

ஜனவரி 20-ம் தேதி காருண்யா பல்கலைக்கழகம், மருத்துவமனை, ஊழியர்கள் குடியிருப்பு, சென்னையிலுள்ள ‘இயேசு அழைக்கிறார்’ கட்டடம் என 28 இடங்களுக்குள் வருமானவரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். வெளிநாட்டுப் பணப் பரிவர்த்தனை, வரி ஏய்ப்பு எனப் பல்வேறு விவகாரங்களை முன்வைத்து அதிகாரிகள் கேள்விகளால் துளைத்தெடுத்திருக்கிறார்கள்.

இந்தத் திடீர் சோதனை, காருண்யா நிர்வாகத்திற்கு பெரும் பிரச்சினையை உண்டாக்கி உள்ளது. பால் தினகரனுக்கு, வெளியிலிருக்கும் எதிரிகளைவிட நிர்வாகத்துக்குள்ளிருக்கும் எதிரிகள் அதிகம். பணப் பரிவர்த்தனை, சம்பளம் உட்பட பல்வேறு விவகாரங்களில் நிர்வாகத்துடன் சிலர் மோதல் போக்கைக் கடைப்பிடித்துவருகிறார்கள். அவர்களில் சிலர் செய்த சதி வேலையாக இருக்கலாம் என்கிறார்கள் காருண்யா ஊழியர்கள்.