கிறிஸ்தவ மதபோதகர் பால் தினகரனுக்குச் சொந்தமான “`இயேசு அழைக்கிறார்” அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் கோவையில் உள்ள காருண்யா பல்கலைக்கழகம் உள்ளிட்ட 28 இடங்களில் வருமானவரித்துறையினர் கடந்த மூன்று நாள்களாகச் சோதனை மேற்கொண்டனர்.
ஜனவரி 20-ம் தேதி தொடங்கிய சோதனை இன்று காலை முடிவுக்கு வந்தது. இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்களும், ரூ.120 கோடி அளவுக்கு கணக்கில் வராத முதலீடுகள் மற்றும் 5 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.
பால் தினகரன் அடுத்த வாரம் சென்னையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது பால் தினகரன் கனடாவில் குடும்பத்துடன் இருப்பதாகத் தெரிகிறது.
மத பிரசார கூட்டத்துக்கு வரும் வருவாய் கணக்கில் காட்டப்படாமல் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வைத்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் பெறப்பட்ட நிதியை இங்கு கணக்கில் காட்டாமல் வெளிநாடுகளில் முதலீடு செய்திருப்பதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் கூறினர்.