வெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்

0
1003
Supreme Court rejects urgent hearing Karti Chidambaram Tamil News

வெளிநாடு செல்வதற்கு அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை, ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு பின்னரே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். (Supreme Court rejects urgent hearing Karti Chidambaram Tamil News)

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது ஏர்செல் மேக்சிஸ் மற்றும் ஐ.என்.எக்ஸ் மீடியா உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

சி.பி.ஐ. மற்றும் அமுலாக்கத்துறை போன்ற விசாரணை நிறுவனங்கள் பதிவு செய்துள்ள இந்த வழக்குகளில், கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தான் வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு கார்த்தி சிதம்பரம் சார்பில் உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை அவசரமாக விசாரணை வேண்டும் என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் யு.யு.லலித், கே.எம்.ஜோசப் ஆகியோர் கொண்ட அமர்வில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

எனினும் இந்த வழக்கை அவசரமாக விசாரணை செய்ய நீதிபதிகள் மறுத்து விட்ட நிலையில, கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்வது அவ்வளவு முக்கியமில்லை எனக்கூறிய நீதிபதிகள், ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு பின்னரே இந்த மனு விசாரணைக்கு எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

தமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு

ஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை

என் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி

தமிழ் நாடு முழுவதும் சத்துணவு ஊழியர்கள் போராட்டம்

மகிந்த ராஜபக்ச சர்வதேச குற்றவாளி; அமைச்சர் ஜெயக்குமார்

சபரிமலை கலவரத்தில் ஈடுபட்ட 3505 பேர் கைது

Tamil News Group websites

Tags; Supreme Court rejects urgent hearing Karti Chidambaram Tamil News