மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு

0
905
free land couple gives birth third child Italy government decision

ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. எனவே அந்த நாடுகள் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க பல்வேறு திட்டங்களை உருவாக்கி வருகின்றன. free land couple gives birth third child Italy government decision

ஐரோப்பிய நாடுகளிலேயே இத்தாலியில் தான் குழந்தை பிறப்பு விகிதம் மிக குறைவாக இருக்கிறது. கடந்த ஆண்டு அந்த நாட்டில் 4 லட்சத்து 66 ஆயிரம் குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளன.

குழந்தை பிறப்பு குறைவாக இருப்பதால் அங்கு குழந்தைகள், இளைஞர்களை விட முதியவர்களே அதிகமாகவுள்ளனர்.

எதிர்வரும் 2019ஆம் ஆண்டு தொடக்கம் 2021ஆம் ஆண்டுகளுக்குள் மூன்றாவது குழந்தையை பெற்றெடுக்கும் தம்பதிகளுக்கு முதல் வீட்டைக் கட்டுவதற்காக அல்லது வாங்குவதற்காக 200,000 யூரோவிற்கு வட்டியற்ற வங்கிக் கடன் வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக இத்தாலி நாட்டின் வரவு செலவுத் திட்டத்தில் “குழந்தைக்கான நில ஊக்குவிப்புத் தொகை” என்ற பெயரில் 20 வருடங்களுக்கான செலவுகள் இணைக்கப்பட்டுள்ளன.

எனவே குழந்தை பிறப்பை ஊக்குவிப்பதற்காக புதிய திட்டங்களை அரசு உருவாக்க உள்ளது. அதன்படி 3-வது குழந்தை பெற்றால் அவர்களுக்கு இலவசமாக விவசாய நிலம் வழங்கலாம் என்று முடிவெடுத்துள்ளனர்.

இதுசம்பந்தமான அறிவிப்பு வருகிற பட்ஜெட்டில் வெளியிடப்படவிருக்கிறது. இதை எப்படி அமல்படுத்தலாம் என்பது பற்றி தொடர்ந்து தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்கள்.

tags :- free land couple gives birth third child Italy government decision

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

எமது ஏனைய தளங்கள்