முச்சக்கர வண்டி சாரதி வங்கிக் கணக்கில் 300 கோடி ரூபாய்!!

0
498
three-wheeler bank account 300 crore rupees

பாகிஸ்தானில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவரின் வங்கிக் கணக்கில் 300 கோடி ரூபாய் பரிமாற்றம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. three-wheeler bank account 300 crore rupees

பாகிஸ்தான் மாநிலம் கராச்சியை சேர்ந்தவர் முகமது ரஷீத். இவர் வாடகை முச்சக்கர வண்டி ஓட்டி வருகிறார்.

இந்நிலையில் இவரது வங்கிக் கணக்கில் 300 கோடி ரூபாய் செலுத்தப்பட்டு பின்னர் அது வெளிநாட்டிற்கு மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவரிடம் பாகிஸ்தான் மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஒரு ஆண்டில் 300 ரூபாய் சேமிப்பதே சவாலாக இருக்கும் தன் கணக்கில் எப்படி எவ்வளவு பணம் வந்ததென்று தெரியாது என கூறியுள்ளார்.

இறுதியில் யாரோ சில மோசடி கும்பல் தான் இந்த வேலையை செய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அப்பாவி பொதுமக்களின் வங்கிக்கணக்கில் சில மோசடி கும்பல் இப்படி செய்வது வாடிக்கையாகி வருகிறது எனவும் அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக அவரிடம் பாகிஸ்தான் மத்திய புலனாய்வு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஒரு ஆண்டில் 300 ரூபாய் சேமிப்பது என்பதே பெரிய விஷயம் என தெரிவித்துள்ள முகமது ரஷீத், தன்னிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியதை நினைத்தால் தற்போதும் நடுக்கமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

அதிகாரிகள் முதலில் விசாரணைக்கு அழைத்தபோது பயந்து ஒளிந்துகொண்டதாகவும், பின்னர் தனது நண்பர்கள், உறவினர்கள் ஆலோசனையின் பேரில் விசாரணைக்கு ஒத்துழைத்ததாகவும் முகமது ரஷீத் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற ஏழைகளின் வங்கிக் கணக்கின் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் பணம் வெளிநாடுகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், இவை அனைத்தும் சட்டவிரோதமாக ஈட்டப்பட்டவை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மோசடியாக ஈட்டப்பட்ட பணத்தை மீட்கவும், முறைகேட்டில் ஈடுபட்டவர்களை தண்டிக்கவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முயன்று வரும் நிலையில் இத்தகைய நிகழ்வுகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

tags ;- three-wheeler bank account 300 crore rupees

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

எமது ஏனைய தளங்கள்