தமிழ் நாடு முழுவதும் சத்துணவு ஊழியர்கள் போராட்டம்

0
730
Tamil Nadu through Nutrition staff struggle Tamil News

தமிழ் நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் இன்றைய தினம் மறியல் போராட்டம் நடைபெற்றது. (Tamil Nadu through Nutrition staff struggle Tamil News)

சம்பள உயர்வு, குடும்ப ஓய்வூதியம், பணிக்கொடை ஆகியவற்றை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்;டது. இந்த போராட்டத்தில் சத்துணவு அமைப்பாளர்கள், சமையலாளர்கள், உதவியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

சென்னையில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் மாவட்ட தலைவர் கேசவன் தலைமையில் இடம்பெற்ற மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை பொலிஸார் கைதுசெய்தனர்.

சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்றதால் பள்ளிகளில் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்குவதில் பாதிப்பு ஏற்படாமல தடுக்க அரசு முன் ஏற்பாடுகளை செய்திருந்தது.

அங்கன்வாடி பணியாளர்கள், 100 நாள் திட்டத்தில் வேலை செய்பவர்கள், ஊராட்சி செயலாளர் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் சத்துணவு தயாரிக்கப்பட்டு குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது.

அனுமதியின்றி வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக 100 க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்களை பொலிஸார் கைதுசெய்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவின் பேரில் அந்தந்த தலைமை ஆசிரியர்களைக் கொண்டு தற்காலிக ஊழியர்களை நியமித்து சத்துணவு செய்யும் பணிகள் நடைபெற்றது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

டெல்லியில் தண்டவாளத்தில் மதுவருந்திய மூவர் புகையிரதம் மோதி பலி

மேக் இன் இந்தியா திட்டம் உலக அளவில் மாறியுள்ளது; நரேந்திர மோடி

நாட்டு மக்களை பிரதமர் நரேந்திர மோடி ஏமாற்றிவிட்டார் ; மல்லிகார்ஜுன கார்கே

இராணுவ கட்டளைத்தளபதியை திருப்பி அனுப்பியமை தொடர்பில் ஐநாவுக்கு யஸ்மின் சூக்கா பாராட்டு!

மனோ கணேசன் ரணிலுக்கு ஆதரவு; டக்ளஸ் மஹிந்தவுக்கு ஆதரவு

இலங்கைக்கு மிக விரைவில் விஜயம் மஹிந்தவுக்கு சுப்ரமணியன் சுவாமி வாழ்த்து

Tamil News Group websites

Tags; Tamil Nadu through Nutrition staff struggle Tamil News