இங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்

0
554
death football club owner Srivastava UK

இங்கிலாந்தில் உள்ள பிரபல கால்பந்து கிளப்புகளில் ஒன்று லெய் செஸ்டர் சிட்டி. 2015-16ம் ஆண்டு நடந்த பிரிமியர் ‘லீக்‘ போட்டியில் அந்த கிளப் சாம்பியன் பட்டம் பெற்றது. death football club owner Srivastava UK

லெய்செஸ்டர் சிட்டி எப்.சி. அணியின் உரிமையாளர் விச்சை சிறிவத்தானபிரபா. தாய்லாந்தைச் சேர்ந்த கோடீஸ்வரரான இவர் 2010-ம் ஆண்டு அந்த கால்பந்து கிளப்பை வாங்கினார். லெய்செஸ்டர்சிட்டி- வெஸ்ட் ஹாம் கிளப் அணிகள் மோதிய போட்டி நேற்று நடந்தது. இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சம நிலையில் முடிந்தது.

இந்தப் போட்டி முடிந்த சிறிது நேரத்தில் லெய்செஸ்டர் சிட்டி அணியின் உரிமையாளர், கிங்பவர் ஸ்டேடியத்தில் இருந்து உலங்கு வானூர்தியில் புறப்பட்ட சில வினாடிகளிலேயே விபத்துக்குள்ளானது. ஸ்டேடியத்தின் முன்பு உள்ள பார்க்கிங் பகுதியில் உலங்கு வானூர்தி விழுந்து வெடித்து தீப்டித்தது.

இந்த விபத்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் விச்சை சிறிவத்தானபிரபா அவருடன் மேலும் 4 பேர் பலியாகியுள்ளனர்.

அந்த கிளப்பின் பணியாளர்களான நுர்சாரா சுக்நமாமி, கேவே போர்ன், விமானி எரிக்சுவாபர், அவரது உதவியாளர் இசபெல்லா ரோசா ஆகியோரும் உயிரிழந்துள்ளனர்.

உலங்கு வானூர்தி வெடித்து சிதறியதில் ஸ்டேடியம் முன்பு நெருப்பு கோளம் ஏற்பட்டது. போட்டியை பார்த்து விட்டு வெளியே சென்றுக் கொண்டு இருந்த கால்பந்து இரசிகர்கள் இதை பார்த்து பீதி அடைந்து ஓடினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

உலங்கு வானூர்தியில் உள்ள விசிறியில் ஏற்பட்ட சிக்கல் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

உலகின் சிறந்த மனிதனை இழந்து விட்டதாக அந்த கிளப் தனது உரிமையாளர் மரணம் தொடர்பாக தெரிவித்துள்ளது.

tags :- death football club owner Srivastava UK

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

  ********************************************

தொடர்புடைய ஏனைய தளங்கள்

**********************************************