நாட்டு மக்களை பிரதமர் நரேந்திர மோடி ஏமாற்றிவிட்டார் ; மல்லிகார்ஜுன கார்கே

0
819
Prime Minister Modi cheated people mallikarjun Tamil News

பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து நாட்டு மக்களை பிரதமர் நரேந்திர மோடி ஏமாற்றிவிட்டதாக மல்லிகார்ஜுன கார்கே குற்றஞ்சாட்டியுள்ளார். (Prime Minister Modi cheated people mallikarjun Tamil News)

பாகல்கோட்டை மாவட்டம் ஜமகண்டி சட்டசபை தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் சார்பில் ஆனந்த் நியாமகவுடா வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

அவருக்கு ஆதரவாக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா தீவிர பிரசாரம் செய்து வரும் நிலையில், ஆனந்த் நியாமகவுடாவுக்கு ஆதரவாக ஜமகண்டி தொகுதியில் நாடாளுமன்ற காங்கிரஸ் குழு தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரசாரத்தில் ஈடுபட்டார். இங்கு அவர் மேலும் கூறுகையில்,

மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்து 4½ ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக ஆண்டுக்கு ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுப்பதாகவும், வெளிநாட்டு வங்கியில் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை இந்தியாவுக்கு மீட்டு வருவதாகவும், ஒவ்வொரு இந்தியர்களின் வங்கி கணக்கிலும் ரூ.15 இலட்சம் போடுவதாகவும் வாக்குறுதிகளை கொடுத்தார்.

ஆனால் அவர் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. பொய் வாக்குறுதிகளை கொடுத்து நாட்டு மக்களை பிரதமர் நரேந்திர மோடி ஏமாற்றி விட்டார்.

மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்த பின்னர் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து விட்டது. காங்கிரஸ் ஆட்சியில் எந்த வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை என்று பிரதமர் குற்றச்சாட்டுகளை கூறினார்.

தற்போது பாரதிய ஜனதா ஆட்சியில் நாட்டின் வளர்ச்சி பின்னோக்கி சென்றிருப்பதை மக்கள் புரிந்து வைத்துள்ளனர். பெற்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே செல்கின்றது.

அத்தியாவசிய பொருட்களின் விலையும் பல மடங்கு உயர்ந்து விட்டது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டது. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கும், பிரதமருக்கும் மக்கள் தகுந்த பாடம் புகட்ட தயாராகி விட்டார்கள்.

கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகின்றது. ஆட்சியை கவிழ்க்க நினைக்கும் பாரதிய ஜனதாவின் கனவு நிறைவேறாது.

இடைத்தேர்தல் நடைபெறும் 5 தொகுதிகளிலும் காங்கிரஸ், ஜனதா தளம் கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெறுவது உறுதி. மக்கள் காங்கிரஸூக்கு ஆதரவு அளிக்க தயாராகி விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

டெல்லியில் தண்டவாளத்தில் மதுவருந்திய மூவர் புகையிரதம் மோதி பலி

மேக் இன் இந்தியா திட்டம் உலக அளவில் மாறியுள்ளது; நரேந்திர மோடி

ஊழல் வாதிகளிடம் ஆட்சியை கொடுக்க கூடாது! ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்!

இராணுவ கட்டளைத்தளபதியை திருப்பி அனுப்பியமை தொடர்பில் ஐநாவுக்கு யஸ்மின் சூக்கா பாராட்டு!

மனோ கணேசன் ரணிலுக்கு ஆதரவு; டக்ளஸ் மஹிந்தவுக்கு ஆதரவு

இலங்கைக்கு மிக விரைவில் விஜயம் மஹிந்தவுக்கு சுப்ரமணியன் சுவாமி வாழ்த்து

Tamil News Group websites

Tags; Prime Minister Modi cheated people mallikarjun Tamil News