ஜேர்மனியில் வீரிய சக்தி கொண்ட மருந்தை கொடுத்து 100 பேரை கொன்ற தாதி

0
715
Germany powerful nurse killed 100 people

ஜேர்மனியை சேர்ந்த ஆண் தாதி நீல்ஸ் ஹேஜெல் (41). இவர் ஓல்டன்பெர்க் மற்றும் டெல்மென் ஹார்ஸ்ட் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிந்தார். Germany powerful nurse killed 100 people

அப்போது நோயாளிக்கு அளவுக்கு மீறி ஊசி மருந்து மற்றும் மாத்திரை கொடுத்து வந்ததில் பலர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 2005-ம் ஆண்டில் டெல்மென் ஹார்ஸ்ட் மருத்துவமனையில் நோயாளிக்கு வைத்தியர் பரிந்துரைக்காத அளவுக்கு அதிகமான வீரிய சக்தி கொண்ட ஊசி போட்டபோது கையும் களவுமாக சிக்கினார்.

கைது செய்யப்பட்ட அவருக்கு கடந்த 2008-ம் ஆண்டில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கிடையே இவரது சிகிச்சையின் காரணமாக மேலும் பலர் உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி டெல்மென் ஹார்ஸ்ட் மருத்துவமனையில் கடந்த 2000 முதல் 2005-ம் ஆண்டு வரை 65 பேரும், ஒல்டன்பர்க் மருத்துவமனையில் 35 பேரும் இவரால் உயிரிழந்தது தெரியவந்தது.

இந்த கொலைகள் குறித்து ஓல்டன்பெர்க் நகர நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. ஜேர்மனியில் உலகப் போருக்கு பிறகு நடந்த மிகப்பெரிய குற்ற சம்பவமாக இது கருதப்படுகிறது.

tags :- Germany powerful nurse killed 100 people

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

எமது ஏனைய தளங்கள்