மே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது

0
540
westindies player dwayne bravo announces retirement international cricket

மேற்கிந்திய அணியின் சகலதுறை வீரர் டுவைன் பிராவோ சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.35 வயதான பிராவோ 40 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 164 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 66 ரி20 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையிலேயே ஓய்வை அறிவித்துள்ளார். westindies player dwayne bravo announces retirement international cricket,sports news in tamil,cricket news,west indies player trending news

தனது ஓய்வு குறித்து பிராவோ வெளியிட்டுள்ள அறிக்கையில் “அனைத்து வகை போட்டிகளிலிருந்தும் நான் உத்தியோகபூர்வமாக ஓய்வுபெற்றுள்ளேன் என்பதை கிரிக்கெட் உலகிற்கு அறிவிக்க விரும்புகின்றேன்” என பிராவோ தெரிவித்துள்ளார்.

14 வருடத்திற்கு முன்னர் நான் மேற்கிந்திய அணிக்காக எனது முதல்போட்டியை ஆடிய தருணம் இன்னும் எனது நினைவிலுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

westindies player dwayne bravo announces retirement international cricket

Tags: tamil news videos,today trending tamil news,trending video updates,today viral video, tamil news