திருப்பதி அருகே செம்மரம் கடத்த முயற்சித்த தமிழக இளைஞர்கள் இரண்டு பேரை செம்மர கடத்தல் தடுப்புப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். (Tamil Nadu Youth two arrested Red Sandalwood smuggling issue)
திருப்பதி அருகே சேஷாசல வனப்பகுதி பீமாவரம் என்ற இடத்தில் செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி. வெங்கட்ரமணா, இன்ஸ்பெக்டர் சந்து, வன அலுவலகர் லட்சுமிபதி மற்றும் பொலிஸார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது, 20 பேர் கொண்ட கும்பல் செம்மரங்களை வெட்டி காரில் ஏற்றி கொண்டிருந்த நிலையில், அவர்களை கண்ட பொலிஸார் சரணடையுமாறு எச்சரிக்கை விடுத்தனர்.
ஆனால் அந்த கும்பல் தப்பியோடியதுடன், அவர்களை துரத்தி சென்ற பொலிஸார் 2 பேரை மடக்கி பிடித்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையை சேர்ந்த வெங்கடேஷ், கிருஷ்ணகிரியை சேர்ந்த கார் சாரதி அபு பக்கர் என தெரியவந்தது.
செம்மர கடத்தல் கும்பல் விட்டுச்சென்ற 14 செம்மரங்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பொலிஸார் பறிமுதல் செய்தனர்.
தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- 100 வயது பாட்டியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 20 வயது காமுகன்
- தள்ளுவண்டியில் இறுதி ஊர்வலமானார் ஆதரவற்ற தொழிலாளி
- இஸ்ரேலிடம் இருந்து ஏவுகணை எதிர்ப்பு கருவிகளை வாங்க இந்தியா திட்டம்
- உத்தரகாண்ட் பிரதேசத்தில் 827 ஆபாச இணையத் தளங்களுக்கு தடை
- அரசியலில் பின்னடைவு கிடையாது ; டிடிவி தினகரன்
- விமான நிலையத்தில் ஜெகன் மோகன் ரெட்டி மீது கத்திக்குத்து தாக்குதல்
- டெல்லி அமைச்சரின் வீட்டில் சோதனை; 37 இலட்சம் ரூபாய் பறிமுதல்
- ஜம்மு – காஷ்மீரில் பயங்கர துப்பாக்கிச் சண்டை
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Tags; Tamil Nadu Youth two arrested Red Sandalwood smuggling issue