ஊழல் வாதிகளிடம் ஆட்சியை கொடுக்க கூடாது! ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்!

0
104

தேசிய வளங்களை சர்வதேச நாடுகளுக்கு விற்பனை செய்தல் மற்றும் அரசாங்கத்தின் ஊழல் மோசடிகள் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று மக்கள் விடுதலை முன்னணி கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுத்திருந்தது. JVP Colombo Protest Today Sri Lanka Tamil News

இந்த எதிர்ப்பு பேரணி கொழும்பு புஞ்சி பொரல்லசந்தியிலிருந்து மருதானை ஊடாக கோட்டை புகையிர நிலையம் வரை இடம்பெற்றது.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க, பொதுச் செயளாலர் டில்வின் சில்வா, பிரச்சார செயளாலர் விஜித ஹேரத் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது உரையாற்றிய ஜே.வி.பி தலைவர் அநுர குமார திஸாநாயக்க ,

மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்ரமசிங்க இணைந்த தேசிய அரசாங்கம் மூன்று வருடங்களை நிறைவு செய்துள்ளது. எனினும் அவர்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து நாட்டில் நிலவி வரும் மோசமான நிலைக்கு காரணம் ரணிலின்பொருளாதாரக் கொள்கையே என கூறியுள்ளார்.

எதிர்வரும் காலங்களில் ஊழல் மோசடிகளில் ஈடுபடும் ஒரு தரப்பினரிடமிருந்து மற்றோரு ஊழல் தரப்பினருக்கு மக்கள் ஆட்சி அதிகாரத்தை வழங்கிவிடக் கூடாது என அவர் பொது மக்களிடம் வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

இராணுவ கட்டளைத்தளபதியை திருப்பி அனுப்பியமை தொடர்பில் ஐநாவுக்கு யஸ்மின் சூக்கா பாராட்டு!

இன்று மூன்றாவது நாளாக நாலக்க சில்வா மீது விசாரணை!

முச்சக்கரவண்டிகளுக்கு குறைந்த விலையில் புதிய எரிபொருள் அறிமுகம்!

மேர்வின் சில்வா தலைமையில் புதிய இயக்கம் ஆரம்பம்!

கொழும்பு மாநகர சபைக்கு 300 கோடி கடன்!

Tamil News Group websites