வெளிநாடுகளில் சட்டவிரோத சொத்துகள், கருப்பு பணம் வைத்துள்ள ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு எதிரான நடவடிக்கையை வருமான வரித்துறை ஆரம்பித்துள்ளது. (Income tax dept targets foreign assets new anti)
வெளிநாடுகளில் எண்ணற்ற இந்தியர்கள் கருப்பு பணம் பதுக்கி வைத்துள்ள அதேவேளை, சொத்துகளையும் வாங்கியுள்ளனர்.
இதற்கு எதிரான நடவடிக்கையை வருமான வரித்துறை ஆரம்பித்துள்ளடன், இதனை மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் சுஷில் சந்திரா உறுதிப்படுத்தியுள்ளார்.
வருமான வரித் துறையின் இந்த கண்காணிப்பு வளையத்துக்குள் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
அவர்கள் வெளிநாட்டு வங்கிகளில் வைத்துள்ள பணம், வாங்கிய சொத்துகள் ஆகியவை பற்றி வருமான வரித்துறை விசாரணை நடத்தி வருகின்றது. அந்தந்த நாட்டு வரித்துறையுடன் இணைந்து இந்த விசாரணை நடந்து வருகின்றது.
மேலும், மேற்கண்ட இந்தியர்கள், வெளிநாடுகளில் செய்த பண பரிமாற்ற விவரங்களை நிதிப் புலனாய்வு பிரிவிடம் இருந்து வருமான வரித்துறை பெற்றுள்ளதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
இந்த பண பரிமாற்றம் குறித்து விளக்கமளிக்குமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. இவர்களில் செல்வாக்கான, முக்கிய பிரமுகர்களும் அடங்குவர். அதிக சொத்து மதிப்பு கொண்ட தனிநபர்களும் உள்ளனர்.
வெளிநாடுகளில் கருப்பு பணம், சட்டவிரோத சொத்துகள் வைத்துள்ளவர்களுக்கு எதிராக புதிய கருப்பு பண ஒழிப்பு சட்டம், கடந்த 2015 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.
இதன்படி கருப்பு பணம், சட்டவிரோத சொத்துகள் இருப்பது உறுதி செய்யப்பட்டால், அவர்களுக்கு 10 ஆண்டுவரை சிறைத்தண்டனை, 120 சதவீத வரி மற்றும் அபராதமும் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய சட்டத்தின் கீழ், மேற்கண்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிய வருகின்றது. இருப்பினும், தங்களது வெளிநாட்டு பண, சொத்து விவரங்களை வருமான வரி கணக்கு தாக்கலில் தெரிவிக்காதவர்கள் மற்றும் வரி ஏய்ப்பு செய்யும் நோக்கத்தில் செயற்பட்டவர்கள் மீது மாத்திரமே அந்த புதிய சட்டம் பாய்ச்சப்படும் என்று வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- வேலையிடங்களில் பெண்களுக்கான பாலியல் துன்புறுத்தல் வீதம் அதிகரிப்ப
- சபரிமலையில் இன்று நடை அடைப்பு; 6 பெண்கள் தடுத்து நிறுத்தம்
- கமல்ஹாசனுடன் கூட்டணி வைத்தால் காங்கிரஸ் தற்கொலை செய்ய வேண்டும்
- சபரிமலைக்குள் செல்ல முயற்சித்த ரஹானா பாத்திமா வீட்டில் தாக்குதல்
- தமிழகத்தில் ஒரே நாளில் பன்றிக் காய்ச்சலால் 04 பேர் பலி
- நெடுஞ்சாலை அமைப்பதில் எந்த முறைகேடும் நடக்காததால் மேல்முறையீடு
- இந்தியாவில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
- ஊடக சுதந்திரம் அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டது; எஸ்.பி. வேலுமணி
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Tags; Income tax dept targets foreign assets new anti