அமெரிக்காவில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில், தன் 03 குட்டிகளுக்கு தந்தையான ஆண்சிங்கத்தை, பெண் சிங்கம் அடித்து கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. female lion killed her father 3 lion father US biological park
12 வயதான சூரி எனும் பெண் சிங்கம், 10 வயதான நியாக் எனும் ஆண் சிங்கத்தை தாக்கியது. பெண்சிங்கத்தின் திடீர் தாக்குதலுக்கு ஆளான ஆண் சிங்கம் நியாக் மூச்சு திணறி இறந்துள்ளது.
இரு சிங்கங்களும் கடந்த எட்டு ஆண்டுகளாக ஒரே அடைப்புக்குள் வாழ்ந்து வந்தன. நியாக்குடன் இணைந்து 2015ஆம் ஆண்டு மூன்று குட்டிகள் பெற்றெடுத்தது சூரி.
சிங்கங்கள் இருந்த கூண்டில் இருந்து ஒரு அசாதாரணமான கர்ஜனை வந்ததாகவும் அதன் பின்னரே அங்கு சென்று பார்த்ததாகவும் ஊழியர் ஒருவர் தெரிவித்தார். மேலும் பெண்சிங்கம், ஆண்சிங்கத்தின் கழுத்தை இறுக்கிப் பிடித்திருந்தது. அவற்றை பிரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் ஆண் சிங்கத்தின் அசைவு நிற்கும் வரை பெண் சிங்கம் கழுத்தை நெரிப்பதை விடவில்லை எனவும் அவர் கூறினார்.
இதற்கு முன்னர் இந்த இரு சிங்கங்களுக்கு இடையே இப்படி கடுமையான சண்டை ஏற்பட்டதில்லை என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
காட்டில் பெண் சிங்கங்கள் ஆண் சிங்கங்கைளை தாக்குவது அவ்வப்போது நடப்பதுதான். ஆனால் இது போன்ற சம்பவங்கள், சிங்கம் உலவும் உயிரியல் பூங்காக்களில் நடைபெறுவது அரிதானது. எனவே இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
tags :- female lion killed her father 3 lion father US biological park
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
- மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளி வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட 122 ஆணிகள்!
- கனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
- உலகின் மிக நீண்ட கடல் பாலம் திறப்பு!
- ஜமால்கசோஜி கொல்லப்பட்டது உண்மை உடல் எங்கிருக்கிறது என்று தெரியாது – சவுதி அரேபியா
- பாலியல் துன்புறுத்தல்களிலிருந்து குழந்தைகளைக் காக்கத் தவறியமைக்காக, பகிரங்க மன்னிப்பு கோரிய அவுஸ்திரேலியப் பிரதமர்
- திடீரென உடைந்த விமானி அறைக் கண்ணாடி அவசரமாக தரையிறங்கிய விமானம்
- நைஜீரியாவில் இரு மதத்தினர் இடையே ஏற்பட்ட மோதலில் 55 பேர் பலி
- சீனாவில் நிலக்கரி சுரங்க விபத்து 2 தொழிலாளர்கள் பலி – தொடரும் மீட்பு பணி
எமது ஏனைய தளங்கள்