தாய்வானில் 6.0 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம்

0
542
6.0 magnitude earthquake Taiwan

பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் உள்ள தாய்வான் நாட்டில் இன்று மதியம் கடும் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது. 6.0 magnitude earthquake Taiwan

தென்கிழக்கு தாய்வானின் கரையோரப் பகுதியிலுள்ள சுவாவோ நகரில் இன்று (செவ்வாய்க்கிழமை) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தலைநகர் தாய்பேயிலும் குறித்த நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் நடுக்கத்திற்கு உட்பட்டதை உணர்ந்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த நிலநடுக்கமானது, தாய்வான் தென்கிழக்கு கரையோர நிலத்தடியில் 26 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் எந்தவித உயிர், உடைமை சேதங்களும் ஏற்படவில்லையென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பூமிக்கடியில் நகரும் தன்மையுடைய இரண்டு டெக்டோனிக் தட்டுகள் சந்திக்கும் இடத்திற்கு அருகாமையில் தாய்வான் உள்ளது. எனவே, டெக்டோனிக் தட்டுகள் உராயும்போது ஏற்படும் நிலநடுக்கத்தின்போது தாய்வான் கடுமையாக பாதிக்கப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் இதே ஹூவாலியன் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது 17 பேர் உயிரிழந்தனர். 1999ல் 7.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு 2400 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

tags :- 6.0 magnitude earthquake Taiwan

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

எமது ஏனைய தளங்கள்