சபரிமலையில் இன்று நடை அடைப்பு; 6 பெண்கள் தடுத்து நிறுத்தம்

0
610
Sabarimala Iyappan Temple closing today 6 Women stop

ஐப்பசி மாத பூஜை முடிந்து இன்றைய தினம் சபரிமலை நடை அடைக்கப்படுகின்ற நிலையில், ஐயப்பன் கோவிலுக்கு செல்ல முயன்ற 6 பெண்களை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தியுள்ளார். (Sabarimala Iyappan Temple closing today 6 Women stop)

கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதியளித்து உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது.

இதற்கு எதிராக மாநிலம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்திருக்கும் நிலையில், ஐப்பசி மாத பூஜைக்காக கடந்த 17 ஆம் திகதி சபரிமலை கோவிலின் நடை திறக்கப்பட்டது.
அதுமுதல் ஐயப்பனை தரிசிப்பதற்காக வந்த பெண்கள், பக்தர்களால் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இதனால் அந்த பகுதிகளில் பொலிஸாருக்கும், பக்தர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதுடன், சபரிமலை சன்னிதானம், பம்பை, நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் கொச்சியை சேர்ந்த ரெஹானா பாத்திமா என்ற முஸ்லிம் பெண்ணும், ஆந்திராவை சேர்ந்த டி.வி. பெண் ஊடகவியலாளர் கவிதா கோஷியும் கடந்த 19 ஆம் திகதி சபரிமலைக்கு சென்றனர்.

பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் சன்னிதானத்துக்குள் நுழைய முயன்ற அவர்களை, 18 ஆம் படி அருகே வைத்து அர்ச்சகர்கள் மற்றும் பக்தர்கள் தடுத்து நிறுத்தியதால் திரும்பி சென்றனர்.

இதனைப் போன்று நேற்று முன்தினம் சபரிமலைக்கு செல்ல முயன்ற தலித் பெண் ஆர்வலர் ஒருவரும், பக்தர்களின் போராட்டம் மற்றும் கனமழை காரணமாக பம்பையில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டார்.

இவ்வாறு சபரிமலை விவகாரம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ஆந்திராவை சேர்ந்த புனித யாத்திரை குழு ஒன்று நேற்று சபரிமலைக்கு வந்த போது அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; Sabarimala Iyappan Temple closing today 6 Women stop