கமல்ஹாசனுடன் கூட்டணி வைத்தால் காங்கிரஸ் தற்கொலை செய்ய வேண்டும்

0
452
Nanjil Sampath Comments Kamal Haasan

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர் கமலுடன், காங்கிரஸ் இணைந்தால் கல்லறைக்கு செல்வதற்கு சமம் என அரசியல்வாதி நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். (Nanjil Sampath Comments Kamal Haasan)

ஆரணியில் ஊடகவியலாளர்கள் மத்தியில் நாஞ்சில் சம்பத் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். எடப்பாடி பழனிசாமி மீது ஊழல் முறைப்பாடு உள்ளது. முதலமைச்சர் பதவியில் இருந்து அவர் விலகியிருக்க வேண்டும்.

சபரிமலை தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பெண்களே போராடுவது ஆச்சரியமாக இருக்கின்றது.

‘மீடு’ விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் முன்மொழிந்ததை நான் வழிமொழிகிறேன். ‘மீடு’வை இன்று பலர் எல்லை தாண்டி கையில் எடுப்பது வேதனையளிக்கிறது. ‘மீடு’வை மிஸ்யூஸ் மற்றும் துஷ்பிரயோகம் செய்யக்கூடாது.

கமலுடன் காங்கிரஸ் இணைந்தால் கல்லறைக்கு செல்வதற்கு சமமாகிவிடும். கமல்ஹாசனுக்கு அரசியல் தெரியாது.

தி.மு.க.வுடன் இருந்தால் தான் காங்கிரசுக்கு பலன் கிடைக்கும். கமல்ஹாசனுடன் கூட்டணி வைத்தால் தற்கொலை செய்து கொள்வதை போல் தமிழகத்தில் காங்கிரசின் நிலைமை மாறி விடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; Nanjil Sampath Comments Kamal Haasan