பிரித்தானியாவில் 6 வயது சிறுமி ஒருவர் தமது கொடூரமான தந்தையிடமிருந்து சித்ரவதை அனுபவிக்கும் தாயாரை காப்பாற்றியுள்ளார். Britain girl saved her mother devil worship father
பாடசாலை ஆசிரியரிடம் தமது தந்தையின் செயற்பாடுகள் குறித்து புகார் அளித்த சிறுமி, தமது தந்தை மிகவும் மோசமானவர் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுவரும் நீதிபதி, இதுவரையான தமது நீதித்துறை வாழ்க்கையில், இதுபோன்ற ஒரு கொடூரமான சாத்தான் வழிபாட்டு முறையை கேள்விபட்டதே இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
சிறுமியின் புகாரை கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்க அடுத்த சில மணி நேரத்தில் 34 வயது Scott Keegans என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் பேசிய 36 வயது ஜூடி, கடந்த 3 ஆண்டுகளாக தமது வாழ்க்கையானது மிகவும் கொடூரமாக சித்தரிக்கப்பட்ட ஒரு திகில் படத்துக்கு ஒப்பானதாக இருந்தது என்றார்.
வைத்தியசாலையில் நான் அனுமதிக்கப்பட்டபோது, அங்குள்ள வைத்தியர்கள் அனைவரும் நான் ஏதோ மிக ஆபத்தான வாகன விபத்தில் சிக்கியுள்ளதாக கருதியது மட்டுமன்றி அவர்கள் கண்கலங்கினர்.
ஆனால் இந்த காயங்கள் அனைத்தும் எனது கணவர் எனக்கு அளித்த பரிசு என நான் அவர்களிடம் விளக்கினேன் என்றார் ஜூடி. அவரை தீவிரமாக பரிசோதித்த வைத்தியர்கள், நுரையீரல் மற்றும் உடல் உறுப்புகள் பல சேதமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் உடம்பில் 95 சதவிகிதம் இடங்களிலும் காயங்கள் இருந்தது. இதனால் தொடர்ந்து 5 நாட்கள் வைத்தியர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
கடந்த 2009 ஆம் ஆண்டு ஹாலோவீன் தினத்தின் Scott Keegans-ஐ திருமணம் செய்து கொண்ட ஜூடி, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் வரை தமது கணவர் தம்மை பாசத்துடன் கவனித்து வந்ததாகவும், அதன் பின்னர் அவரது நடவடிக்கைகள் அனைத்திலும் மாற்றம் ஏற்பட்டது எனவும், தினமும் நரகத்தில் குடியிருந்தது போன்ற நிலை ஏற்பட்டதாகவும் ஜூடி தெரிவித்துள்ளார்.
tags :- Britain girl saved her mother devil worship father
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
********************************************
- முகநூல் தகவல் தொடர்புக்குழுவின் தலைவராக நிக் கிளெக் நியமனம்
- அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் சந்தித்த இளவரசர் ஹரி தம்பதியினர்!
- சுற்றுலாவின் போது பொன்டி கடற்கரையை கலகலப்பாக்கிய இளவரசர் ஹரி மற்றும் மேகன்!
- இளவரசர் ஹரி ராஜ விதி முறைகளை மீறி தன்னை காதலித்த இளம்பெண்ணுக்கு அளித்த பரிசு
- சகோதரனின் மரணம் மகிழ்ச்சி அளிக்கிறது: காரணத்தை வெளியிட்ட பிரித்தானிய பெண்
- உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தி ஹரியும் மெர்க்கலும் செய்த காரியம்
- உடன்பாடற்ற பிரெக்சிற்றிற்கு ஐரோப்பிய ஆணைக்குழு தயார்