தென் ஆப்பிரிக்காவில் வீதி விபத்து – 27 பேர் பலி

0
340
South African road accident 27 killed

தென் ஆப்பிரிக்காவின் தெற்கு பகுதியில் உள்ள லிம்போபோ மாகாணத்தில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தபோது திடீரென லாரி டயர் வெடித்தது. South African road accident 27 killed

இதில் நிலைகுலைந்த லாரி முன்னால் சென்ற வாகனங்களின் மீது வேகமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் மினி பேருந்து, டாக்சி மற்றும் சில வாகனங்களில் சென்றவர்கள் விபத்தில் சிக்கியுள்ளனர்.

இந்த விபத்தில் 27 பேர் பரிதாபமாக பலியாகினர் எனவும், மேலும் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து அங்கு சென்ற பொலிஸார் விபத்து நடந்த இடத்துக்கு சென்று போக்குவரத்தை சீரமைத்தனர். வீதி விபத்தில் சிக்கி பலியானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

tags ;- South African road accident 27 killed

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

எமது ஏனைய தளங்கள்