தமிழகத்தின் ஒருசில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. (Heavy rain Tamil Nadu Tamil News)
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருவதுடன், தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில பகுதிகளில் 21 ஆம் திகதி வரை சிறியளவிலான மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக இன்று தமிழகத்தின் சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சில இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கம் மற்றும் வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரத்தில் 7 சென்றி மீற்றர் மழை பெய்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டையில் 6 சென்றி மீற்றர், இராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் 5 சென்றி மீற்றர் மழை பெய்துள்ளதுடன், ஆம்பூர், வேலூர், பெரியகுளம் பகுதியில் தலா 4 சென்றி மீற்றர் மழை பதிவாகியுள்ளது.
தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- சபரிமலைக்கு சென்ற பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் ; பொலிஸார் தடியடி
- தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும்; எடப்பாடி பழனிசாமி
- ஜம்மு காஷ்மீரில் முக்கிய தீவிரவாதி சுட்டுக்கொலை
- சபரிமலைக்கு சென்ற தமிழ் குடும்பம் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் ; பொலிஸார் வேடிக்கை
- நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் தி.மு.க உயர்நிலை குழு ஆலோசனை
- நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் ஆரம்பத் தாமதம்
- இலங்கை அரசின் போக்கு மிகவும் கண்டனத்திற்குரியது; மு.க. ஸ்டாலின்
- ஒடிசாவில் டிட்லி புயல்; வெள்ளப்பெருக்கினால் உயிரிழப்பு 52 ஆக அதிகரிப்பு
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Tags; Heavy rain Tamil Nadu Tamil News