சபரிமலையில் பதற்றம்; தமிழக பேருந்துகள் எல்லையில் நிறுத்தம்!

0
472
Tamilnadu buses stops kerala border Tamil News

சபரிமலைக்கு பெண்கள் அனுமதி தொடர்பில் ஏற்பட்ட விவகாரம் காரணமாக கேரளாவில் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு பாரதிய ஜனதா கட்சி இன்று அழைப்பு விடுத்திருந்தது. (tamilnadu buses stops kerala border Tamil News)

இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து குமரி மாவட்டம் வழியாக கேரளா செல்லும் அரச மற்றும் தனியார் பேருந்துகள் தமிழக கேரளா எல்லையான களியக்காவிளையில் நிறுத்தப்பட்டுள்ளன.

சபரிமலைக்கு அனைத்து வயதுடைய பெண்களும் நுழையலாம் என உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பை வழங்கிய நிலையில், இந்தத் தீர்ப்புக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நேற்றைய தினம் நடைதிறந்த நிலையில் பெண் பக்தர்களை சபரிமலையை காப்போம் என்ற கருத்துடைய பல்வேறு அமைப்பினர் தடுத்து நிறுத்தினர்.

மேலும் கல்வீச்சு உள்ளிட்ட கலவரங்களிலும் அவர்கள் ஈடுபட்டதால் அப்பகுதியில் பதற்றம் நீடித்ததை அடுத்து 144 தடை உத்தரவு போடப்பட்டது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்கள் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய பாரதிய ஜனதா கட்சி உட்பட ஐயப்பன் சேவா சங்கத்தினர் மீது பொலிஸார் தடியடி நடத்தியதை கண்டித்தும் இன்று கேரளாவில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் கேரளா செல்லும் அரசு பேருந்துகள் தமிழக – கேரள எல்லையான களியக்காவிளையில் நிறுத்தபட்டுள்ளதுடன், பாறசாலை பகுதியில் கடைகள் முற்றிலுமாக அடைக்கப்பட்டுள்ளன.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; Tamilnadu buses stops kerala border Tamil News