வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயமுள்ளதால் கரையோரப் பகுதியிலுள்ள மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. (Vaigai River flood littoral public warning)
ஆற்றில் வெள்ளநீர் செல்லும்போது அதில் இறங்கவோ, குளிக்கவோ, கரையோரத்தில் செல்பி எடுக்கவோ கூடாது என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
71 அடி உயரம் உள்ள வைகை அணையில் தற்போது 67 அடி வரை தண்ணீர் மட்டம் உயர்ந்துள்ளதுடன், கடந்த 2 நாட்களுக்கு முன்னரே மாவட்ட நிர்வாகம் மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடக்கப்பட்டது.
68 அடியை நெருங்கியதும் 2 ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை வழக்கமாக விடுக்கப்படுகின்றது. நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் விரைவில் 68 அடியை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனால் நிலக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட விளாம்பட்டி, சித்தர்கள் நத்தம், அணைப்பட்டி, போடியகவுண்பட்டி, குல்லிசெட்டிபட்டி, எஸ். வாடிப்பட்டி, நடக்கோட்டை ஆகிய கிராமங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் பொதுமக்கள் தங்குவதற்கு திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு தேவையான உணவு, மருத்துவ வசதிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கரையோரப் பகுதியில் உடைப்பு ஏற்பட்டால் தற்காலிகமாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்காக மணல் மூடைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- ஜம்மு காஷ்மீரில் மூன்று ஆயுததாரிகள் பலி
- இராமநாதபுரத்தில் விபத்து ; 03 இளைஞர்கள் பலி – ஐவர் காயம்
- பெருமாள் கோவில் 4 ஐம்பொன் சிலைகள் மீட்பு
- பெற்ரோல், டீசல் விலை குறைப்பு; பிரதமர் மோடி யோசனை
- சபரிமலைக்கு பெண்கள் அனுமதி ; நாளை பாதுகாப்பு பலப்படுத்த திட்டம்
- நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் ஆரம்பத் தாமதம்
- இலங்கை அரசின் போக்கு மிகவும் கண்டனத்திற்குரியது; மு.க. ஸ்டாலின்
- ஆட்டோவும், சுற்றுலா வேனும் மோதிய விபத்தில் பெண் உட்பட இருவர் உயிரிழப்பு!
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Tags; Vaigai River flood littoral public warning