இந்துக்களின் கலாசாரத்தை அழிக்கும் கம்யூனிஸ்ட்களின் கனவு பலிக்காது என்று கேரளாவில் நடைபெற்ற ஊர்வலத்தில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். (Tamilisai soundararajan slams Communist party)
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றது.
பாரதிய ஜனதா மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் பந்தளம் அரண்மனை முன்பு இருந்து கலெக்டர் அலுவலகம் வரை கண்டன ஊர்வலம் நடைபெற்றதில் தேசிய செயலாளர் ஷோ தலைமை தாங்கினார்.
தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதுடன், ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், சபரிமலை ஆச்சாரத்தை மீறி இந்து பெண்கள் யாரும் செல்ல முயற்சிக்க மாட்டார்கள். கேரளாவில் உள்ள கம்யூனிஸ்ட் அரசு இந்துவிரோத அரசாக மாறி இந்துக்களின் கலாச்சாரத்தை சீரழிக்க முயற்சி செய்கிறது. அது கனவில் கூட நடக்காது.
சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதை என்ன விலை கொடுத்தும் தடுப்போம். கேரளாவில் இந்த அரசு தான் கடைசி கம்யூனிஸ்ட் அரசாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
திருவனந்தபுரம் அருகே உள்ள கழக்கூட்டத்தில் நடைபெற்ற ஒரு பாடசாலை விழாவில் கேரள தேவசம்போர்ட் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் பங்கேற்றார்.
விழா முடிந்து அவர் காரில் சென்ற போது அங்கு கையில் கருப்பு கொடிகளுடன் வந்த பாரதிய ஜனதா கட்சியினர் அவரது காரை முற்றுகையிட்டனர். அவரை கண்டித்து கோஷங்களையும் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாரதிய ஜனதாவினரை அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டு அமைச்சரை பாதுகாப்பாக பொலிஸார் அழைத்துச் சென்றனர்.
தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பிரான்ஸிற்கு விஜயம்
- உத்தரப் பிரதேசத்தில் புகையிரதம் தடம்புரண்டு விபத்து; 05 பேர் பலி
- ஊழல் செய்து காங்கிரஸ் கட்சி நாட்டை சீர்குலைத்துவிட்டது; நிர்மலா சீதாராமன்
- நிதின் கட்காரி தொலைகாட்சி பேட்டி; ராகுல்காந்தி ஏளனம்
- நக்கீரனை சந்திக்க அனுமதி மறுப்பு; வைகோ தர்ணா போராட்டம்
- பாலியல் அவதூறுக்கு காலம் உண்மையை சொல்லும்; வைரமுத்து
- நக்கீரன் பத்திரிகையை முடக்க முயற்சி; நக்கீரன் கோபால்
- சபரிமலை வழக்கு; அவசர வழக்காக விசாரணை செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு
- சத்தீஸ்கரில் இரும்பு ஆலையில் விபத்து; 06 தொழிலாளர்கள் பலி
- சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் ; பொதுமக்கள் மீது பொலிஸார் தடியடி
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Tags; Tamilisai soundararajan slams Communist party