இந்தோனேசியாவில் இன்று மீண்டும் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

0
490
6.0 magnitude earthquake Indonesia

இந்தோனேசியாவின் சுலவேசி தீவை சமீபத்தில் நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவான அந்த பயங்கர நிலநடுக்கத்தால், 170 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டு பலு, டோங்கலா பகுதிகளில் சுனாமி தாக்கியது. 6.0 magnitude earthquake Indonesia

இந்த இயற்கை பேரழிவுகளால் இந்தோனேசியாவில் 2000ற்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும், பல கோடி மதிப்பிலான சேதம் ஏற்பட்டது. இயற்கையின் இந்த கோர தாண்டவத்தில் இருந்து அந்நாடு மீளுவதற்குள் அங்கு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஜவா மற்றும் பாலி தீவுகளில் இன்று ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. எனினும் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை

இதனால் மக்கள் பலரும் தங்களது வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்து தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கம் காரணமாக பொது மக்களுக்கோ அல்லது சொத்துகளுக்கோ எந்தவித சேதமும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

tags :- 6.0 magnitude earthquake Indonesia

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

எமது ஏனைய தளங்கள்