அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பிரான்ஸிற்கு விஜயம்

0
580
Nirmala Sitharaman leaves France 3 day visit

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமாக பிரான்ஸ் நாட்டிற்கு சென்றுள்ளார். (Nirmala Sitharaman leaves France 3 day visit)

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது, தேச பாதுகாப்புக்காக இந்திய விமான படைக்கு ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்காக விமானம் ஒன்று ரூ.526 கோடிக்கு வாங்குவதாக முடிவு செய்யப்பட்டது.

இதற்கிடையே, 2014 இல் பாரதிய ஜனதா கட்சி மோடி அரசு பொறுப்பேற்றதும் சில விதிகளை மீறி பிரான்ஸ் அரசுடன் ஒரு விமானத்தின் விலையை 1,670 கோடி ரூபா என நிர்ணயித்து ஒப்பந்தம் போட்டதில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டி வருகின்ற போதிலும் பாரதிய ஜனதா அதனை மறுத்துள்ளது.

எனினும், மத்திய அரசின் தலையீட்டினால் தான் ரபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் சேர்க்கப்பட்டது என அண்மையில் பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி இந்த விவகாரம் குறித்து அந்த நாட்டு ஊடகம் ஒன்றில் கருத்து தெரிவித்தார்.

இது இந்திய அரசியலில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கி வருகின்றது. இந்த நிலையில், மூன்று நாள் அரசு முறைப் பயணமாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பிரான்ஸ் புறப்பட்டு சென்றுள்ளார்.

அங்கு அந்த நாட்டின் பாதுகாப்புத்துறை அசை;சர் ஃப்ளோரன்ஸ் பார்லியை சந்தித்து பரபஸ்பரம் இரு தரப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றி அலோசிக்கவுள்ளார்.

மேலும், 2015 ஆம் ஆண்டு 36 ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்காக பிரதமர் நரேந்திர மோடி கையெழுத்திட்ட ஒப்பந்தங்கள் குறித்தும் அந்த நாட்டு அரசுடன் நிர்மலா சீத்தாராமன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என பாதுகாப்புத்துறை வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.

ரபேல் போர் விமான விவகாரத்தில் பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே கடந்த சில வாரங்களாக அறிக்கை போர் நடந்துவரும் சூழ்நிலையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சரின் பிரான்ஸ் பயணம் முக்கியத்துவம் பெறுகின்றது.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; Nirmala Sitharaman leaves France 3 day visit