தமிழகத்திற்கு தேவையான திட்டங்கள், நிதியளிக்க பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். (Tamil Nadu CM Edappadi Palanisamy requested Prime Minister finance)
டெல்லிக்கு சென்றிருந்த தமிழக முதலமைச்சர் பழனிசாமி, இன்று காலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசியுள்ளார்.
தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலுக்கிடையே பிரதமரை சந்தித்த பின்னர் ஊடகவியலாளர்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சர் பழனிசாமி இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழகத்துக்கு தேவையான திட்டங்கள், நிதியளிக்க பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.
அண்ணாதுரை, ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதை பிரதமரிடம் தெரிவித்தேன்.
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை ஒட்டி அவரது பெயரை, சென்னை மத்திய நிலையத்திற்கு சூட்ட வேண்டும் என கோரினேன். உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய நிதி, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பு, சென்னை வெள்ள தடுப்பு திட்டத்திற்கு ரூ.4,000 கோடி ஒதுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டேன்.
ஜி.எஸ்.டி வரி ஒதுக்கீடு, புயல் வீசும் காலத்தில் மீனவர்களை மீட்க கன்னியாகுமரியில் ஹெலிகொப்டர் இறங்கும் வசதி கொண்ட கடற்படை தளம் அமைக்க கேட்டுக் கொண்டேன். தமிழகத்தின் கோரிக்கைகளை பரீசிலிப்பதாக பிரதமர் உறுதியளித்துள்ளார்.
தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை மேற்கொள்ள நிதி ஆதாரங்கள் தேவை. அவற்றை கருத்திற்கொண்டு, தமிழகத்தில் பெற்ரோல், டீசல் மீதான வரியை குறைப்பது குறித்து பரிசீலிக்கப்படும்.
கூட்டுறவு சங்க தேர்தலில், 93 சதவீத இடங்களில் அ.தி.மு.க வெற்றி பெற்றுள்ளது. கொடுக்கும் புகாருக்கெல்லாம் அமைச்சரவை இராஜினாமா செய்ய வேண்டுமென்றால், இந்தியாவில் அனைவரும் இராஜினாமா செய்ய வேண்டியது தான்.
தேர்தலுக்கு இன்னும் காலம் உள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரே கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும். துணை முதலமைச்சர் தினகரன் சந்திப்பு குறித்து கருத்து தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தேவையான விளக்கம் அளித்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- ஜம்மு காஷ்மீரில் உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு இன்று ஆரம்பம்
- நக்சலைட் ஆயுததாரிகளை 3 ஆண்டிற்குள் ஒழித்துக்கட்டுவோம் ; ராஜ்நாத் சிங்
- தமிழக முதலமைச்சர் எடப்பாடி பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பு
- கேரளாவில் கன மழைக்கு எச்சரிக்கை
- டெல்லி நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் நேரில் முன்னிலை; கைதுசெய்ய தடை நீடிப்பு
- பாலிவுட் நடிகர் நானா படேகர் மீது பாலியல் வழக்கு!
- குடிப்பழக்கத்தை விட்டுவிடுங்கள்! – கடிதம் எழுதி வைத்து விட்டு உயிரை மாய்த்துக்கொண்ட பெண்!
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Tags; Tamil Nadu CM Edappadi Palanisamy requested Prime Minister finance