சைவத்திற்கு மாறினார் விராட் கோலி

0
146
virat kohli turns vegan says feeling stronger

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி தனது விளையாட்டின் மீது எவ்வளவு அக்கறை கொண்டுள்ளாரோ, அதேயளவு தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதிலும் கொண்டுள்ளார். கிரிக்கெட்டில் அறிமுகமாகிய காலத்தில் விராட் கோலி பெரிய அளவில் உடற்தகுதியின் இருந்தது கிடையாது. அதன்பின் தனது உடற்தகுதியில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். இதன் காரணமாக ‘சிக்ஸ் பேக்’ போன்று தனது உடலை மெருகேற்றினார். virat kohli turns vegan says feeling stronger,tamil news,tamil sports news,sports news in tamil

தற்போதைய காலக்கட்டத்தில் உடலை கட்டுக்கோப்போடு வைத்திருப்பதில் விராட் கோலிக்கே முதலிடம். இதற்காக அவர் உணவு கட்டுப்பாட்டில் மிக அதிக அளவில் கவனம் செலுத்தி வருகிறார்.

புரோட்டீன் சத்திற்காக இறைச்சி, முட்டை, பாலில் தயாரிக்கப்படும் உணவு வகைகளை மேற்கொண்டார். கடந்த நான்கு மாதத்தில் இருந்து திடீரென அசைவத்தில் இருந்து சைவத்திற்கு மாறியுள்ளார்.

சைவத்திற்கு மாறிய பிறகு முன்பைவிட வலிமையாக இருப்பதாக உணர்வதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆங்கில பத்திரிகை ஒன்று ‘‘கோலி கடந்த நான்கு மாதங்களாக சைவத்திற்கு மாறியுள்ளாராம். தற்போது அவரது செரிமான சக்தி அதிகரித்துள்ளதாகவும், முன்பைவிட வலிமையாக இருப்பதாக உணர்வதாகவும், இறைச்சி, முட்டை போன்றவற்றை அவர் கைவிட்டது என்பதே தெரியவில்லையாம்’’ என்று செய்தி வெளியிட்டுள்ளது.

virat kohli turns vegan says feeling stronger

Tamil News Group websites

Tags: tamil sports news,tamil cricket news,today sports updates,tamil news sports,more sports news