ஓய்வுபெற்றார் மே.இந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான்

0
536
chris gayle retires list cricket magnificent century

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயில், தனது கடைசி உள்ளூர் போட்டியில் சதமடித்து அசத்தியுள்ளார். மேற்கிந்தியத் தீவுகள் அணியின் நட்சத்திர வீரராக திகழ்பவர் கிறிஸ் கெயில். டெஸ்ட் கிரிக்கெட், ஒருநாள் போட்டி, டி20 என அனைத்து வித போட்டிகளிலும் மேற்கிந்திய அணிக்காக பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ள கெயில், உள்ளூர் போட்டிகளில் ஜமைக்கா அணிக்காக விளையாடி வந்தார். chris gayle retires list cricket magnificent century,cricket news in tamil,tamil news updates,trending news

இந்நிலையில் கிறிஸ் கெயில் முதல் தர போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து, சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் கிறிஸ் கெயில் பார்படாஸ் அணிக்கு எதிராக தனது கடைசி போட்டியை விளையாடினார்.

இது கிறிஸ் கெயிலின் கடைசிப் போட்டி என்பதால், அவரைக் கௌரவிக்கும் விதமாக இப்போட்டியில் கெயிலுக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது.

இதையடுத்து நடைபெற்ற போட்டியில், அதிரடி காட்டிய கெயில், 114 பந்துகளில் 122 ரன்கள் குவித்து அசத்தினார். அதுமட்டுமின்றி, தனது அணிக்கு வெற்றியையும் பெற்றுக்கொடுத்தார். கடைசிப் போட்டியில் சதமடித்து கலக்கிய கெயில் பேட்டிங் செய்ய வந்தபோது, சக வீரர்கள் பேட்டை உயர்த்தி மரியாதை செலுத்தினர்.

இதுவரையில் 356 முதல்தரப் போட்டிகளில் விளையாடியுள்ள கிறிஸ் கெயில், சுமார் 12,436 ரன்களைக் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

chris gayle retires list cricket magnificent century

Tamil News Group websites

Tags: tamil sports news,tamil cricket news,today sports updates,tamil news sports,more sports news