பிரித்தானியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே பிரெக்சிற் உடன்பாட்டை எட்டுவதற்கான வாய்ப்புகள் கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளதாக, ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். increase chance reach Bretkits agreement
ஒஸ்ரிய ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஆணைக்குழுவின் தலைவர் ஜீன் க்ளோட் ஜங்கர் நேற்று (வெள்ளிக்கிழமை) இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எனினும், ஒக்டோபர் மாதத்தில் உடன்பாடு எட்டப்படும் என்பது சாத்தியமில்லை என்றும், நவம்பர் மாதமளவில் உடன்பாடு எட்டப்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கிடையே டிசம்பர் மாதத்திற்கு முன்பதாக உடன்பாடு எட்டப்படும் என ஐரோப்பாவின் இராஜாங்க அமைச்சர் சேர் அலன் டங்கன் நம்பிக்கை வெளியிட்டார்.
பிரித்தானியா எதிர்வரும் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் திகதியுடன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறவுள்ளது.
ஆனால், அயர்லாந்து எல்லை விவகாரம் உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பாக இரு தரப்பிற்கும் இடையில் இதுவரை உடன்பாடுகள் எவையும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
tags ;- increase chance reach Bretkits agreement
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
********************************************
- அவுஸ்ரேலியாவில் பாம்பு கடிக்கு இலக்கான பிரித்தானிய இளைஞர் பலி!
- பிரித்தானிய பிரதமர் தெரேசா மே-யிற்கு ஐரோப்பிய ஒன்றியம் அழைப்பு
- லண்டனில் முடங்கியது இன்ஸ்டாகிராம்
- பிரித்தானியாவில் பொலிசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் காயம்: 6 பேர் கைது
- லண்டன் நோக்கி வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிக்கு ஏற்பட்ட பரிதாபம்
- பிரெக்சிற் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் கரிசனைகொள்ள வேண்டும் – அமைச்சர் டொமினிக் ராப்