ஜம்மு – காஷ்மீர் பதற்றமான சூழலுக்கு பாகிஸ்தானே காரணம்

0
133
Problem Jammu Kashmir majorly Pakistan

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் நிலவும் பதற்றமான சூழலுக்கு பாகிஸ்தானே காரணம் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றஞ்சாட்டியுள்ளார். (Problem Jammu Kashmir majorly Pakistan)

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், ஜம்மு – காஷ்மீரின் நிலைமை இன்னும் மேம்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

குறித்த மாநிலத்தின் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு பாகிஸ்தானே காரணம் என்றும் பாகிஸ்தானுடனான உறவை மேம்படுத்தவே இந்தியா விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், அதற்கு அந்த நாட்டு அரசு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும் ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதச் செயல்களை ஊக்குவிப்பதை பாகிஸ்தான் தொடர்ந்து செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மும்பையில் கடந்த 1993 ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்புக்கு சதித் திட்டம் தீட்டிய முக்கிய குற்றவாளி தாவூத் இப்ராஹிம், தற்போது பாகிஸ்தானில் தலைமறைவாக இருக்கிறார்.

எனினும், அவரை இந்தியாவுக்கு அழைத்து வருவது மிகவும் சிரமமாக உள்ளது. ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் பல ஆண்டுகளுக்குப் பின்னர் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகின்றது. அந்த தேர்தலில் வாக்களிப்பதற்கு 90 சதவீத மக்கள் ஆர்வமுடன் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; Problem Jammu Kashmir majorly Pakistan