பொலிஸ் மா அதிபரை பதவி விலக்க வேண்டும்! வாசுதேவ நாணயக்கார!

0
492

மைத்திரி – ரணில் தலைமையிலான கூட்டு அரசாங்கத்தின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவராவிடின், நாடு பொருளாதார பின்னடைவைச் சந்திக்கும் என கூட்டு எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான வாசுதேவ நாணயக்கார எச்சரிக்கை விடுத்துள்ளார். DIG Pujith Sundara Conspiracy Sri Lanka Tamil News

கூட்டு எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவருமான வாசுதேவ நாணாயக்கார கொழும்பு மருதானையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இந்த கருத்து தெரிவித்தார்.

“பொலிஸ் மா அதிபர் புஜித் ஜயசுந்தர கெட்ட சகுணத்திற்குள்ளாகியுள்ளார். அவரது செயற்பாடுகள் நடவடிக்கைகள் மாத்திரமல்லாது அவர் மீது தற்போது பண மோசடியொன்று தொடர்பிலும் குற்றச்சாட்டு எழும்பியுள்ளது.கண்டி டிரின்ட்டி கல்லூரியில் கடமையாற்றிய அதிபர் மூலமாக 12 மில்லியன் ரூபா பணம் பொலிஸ் மா அதிபர் புஜித் ஜயசுந்தரவின் வங்கி கணக்கொன்றில் வைப்பிலிடப்பட்டமை தொடர்பில் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வைப்பிலிடப்பட்ட பணம் எவ்வாறு வந்தது? எதற்காக வைப்பிலிடப்பட்டது என பொலிஸ் மா அதிபரிடம் விசாரணைகள் நடாத்தப்பட்டுள்ளது.

எனினும் சட்டத்தரணி தொலவத்த இந்த வழக்கு பிரதிகளை பார்த்து விட்டு, குறித்த வழக்கில் மிக முக்கியமாகக் கருதப்படும் சில விடயங்கள் உள்ள பக்கங்கள் காணாமல் போயுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு மிக முக்கியமாக கருதப்படும் வழக்கு விசாரணைப் பத்திரிகையிலிருந்து பக்கங்கள் காணாமல் போகின்ற வேளையில் அதன் பின்னாள் பொலிஸ் மா அதிபரே நிற்கின்றாரா என்ற சாதாரண சந்தேகம் எழும்புகின்றது.

இவ்வாறான நிலையில் பொலிஸ் மா அதிபரை உடனடியாக பதிவியிலிருந்து விலகுமாறு அரச தரப்பினர் அழுத்தம் பிறப்பிக்க வேண்டும். அவர் விலக மறுப்பு தெரிவித்தாலும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

விரைவில் பேஸ்புக் பாவனைக்கு இலங்கையில் தடை!

பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள தயார்! மஹிந்த அறிவிப்பு!

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைக்கு அதிகாரம் கோருகிறது இராணுவம்!

25 ஆயிரம் வீடுகளை அமைக்கும் வேலைத்திட்டம்! அமைச்சர் சஜித்!

மகிந்தவை காப்பாற்றியது நல்லாட்சியே! மங்களசமரவீர கருத்து!

Tamil News Live

Tamil News Group websites