வடக்கு மஹாவலி திட்டத்தை நிறுத்துமாறு ஜனாதிபதி திடீர் உத்தரவு!

0
511

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் மஹாவலி எல் வலயத் திட்டத்தை உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். President Maithri Stop Mahaweli L Zone Sri Lanka Tamil News

பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று (03) மாலை இடம்பெற்ற வடக்கு அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணிக் கூட்டத்திலேயே மேற்படி உத்தரவை ஜனாதிபதி விடுத்துள்ளார்.

கடந்தமுறை நடைபெற்ற செயலணிக் கூட்டத்தில் மஹாவலி தொடர்பில் எதுவித மாற்றுக் குடியேற்றங்களும் இல்லையென ஜனாதிபதி தெரிவித்திருந்தார். ஓகஸ்டில் வழங்கப்பட்ட மீன்பிடி அனுமதிகள் மற்றும் குடியேற்றம் சம்பந்தமான ஆதாரங்களைச் சமர்ப்பித்த சுமந்திரன், இவற்றை உடனடியாகத் தடைசெய்ய வேண்டுமென ஜனாதிபதியிடம் கோரியிருந்தார்.

இதன்போது, மஹாவலி எல் திட்டத்தில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதை ஏற்றுக்கொண்டுள்ள ஜனாதிபதி, வடக்கில் மேற்கொள்ளப்படும் மஹாவலித் திட்டங்களை உடனடியாக நிறுத்தும்படி, திட்டப் பணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார் என சுமந்திரன் எம்.பி. மேலும் தெரிவித்தார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

விரைவில் பேஸ்புக் பாவனைக்கு இலங்கையில் தடை!

பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள தயார்! மஹிந்த அறிவிப்பு!

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைக்கு அதிகாரம் கோருகிறது இராணுவம்!

25 ஆயிரம் வீடுகளை அமைக்கும் வேலைத்திட்டம்! அமைச்சர் சஜித்!

மகிந்தவை காப்பாற்றியது நல்லாட்சியே! மங்களசமரவீர கருத்து!

Tamil News Live

Tamil News Group websites