சீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி

0
551
naomi osaka caroline wozniacki advance china open

சீன ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.சீனாவில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையான வோஸ்னியாக்கி தனது 2-ஆவது சுற்றில் குரோஷியாவின் பெட்ரா மார்டிச்சை எதிர்கொண்டார். naomi osaka caroline wozniacki advance china open,tamil sports news,tennis news updates,tamilnews.com

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் வோஸ்னியாக்கி 7-5, 6-3 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார். அடுத்த சுற்றில் அவர் எஸ்டோனியாவின் ஆனெட் கோன்டாவிட்டை எதிர்கொள்கிறார். மற்றொரு ஆட்டத்தில் செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா 6-3, 6-4 என்ற நேர் செட்களில் பெலாரஸின் அலெக்ஸாண்ட்ரா சாஸ்னோவிச்சை வீழ்த்தினார். மூன்றாவது சுற்றில் கரோலினா, சீனாவின் வாங் கியாங்கை சந்திக்கிறார். இதேபோல், சீனாவின் ஜாங் ஷுவாய் 6-1, 6-2 என்ற நேர் செட்களில் ஹங்கேரியின் டேமியா பேபோûஸ வீழ்த்தினார். இதையடுத்து ஜாங் ஷுவாய் தனது 3-ஆவது சுற்றில், உலகின் 3-ஆம் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பரை எதிர்கொள்கிறார்.

மற்றொரு ஆட்டத்தில் லாத்வியாவின் அனஸ்தாஸிஜா செவஸ்டோவா 6-3, 6-2 என்ற செட்களில் செக் குடியரசின் டோனா வெகிச்சை வென்றார்.டிமிட்ரோவ் தோல்வி: சீன ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில், உலகின் 3-ஆம் நிலை வீரரான பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் தனது 2-ஆவது சுற்றில் அதிர்ச்சித் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார். அவரை 6-4, 2-6, 6-4 என்ற செட்களில் வென்ற செர்பியாவின் டுசான் லாஜோவிச், அடுத்த சுற்றில் பிரிட்டனின் கைல் எட்மண்டை சந்திக்கிறார். போட்டித் தரவரிசையில் 5-ஆவது இடத்தில் இருக்கும் கைல் எட்மண்ட், தனது முந்தைய சுற்றில் இத்தாலியின் மேடியோ பெரெட்டினியை 7-5, 6-7(2/7), 7-5 என்ற செட்களில் வென்றிருந்தார்.

naomi osaka caroline wozniacki advance china open

Tamil News Group websites

Tags: tamil sports news,tamil cricket news,today sports updates,tamil news sports,more sports news