யாழ்குடாநாடு நீரில் மூழ்கும்! பீதியை கிளம்பியுள்ள சிரேஷ்ட பொறியிலாளர்!

0
497

நிலத்தடி நீரை நம்பிவாழும் யாழ். குடாநாட்டு மக்களின் நன்மையை கருத்திற்கொண்டு, நன்னீர் தேக்கங்கள் மற்றும் குளங்களை பாதுகாப்பது அவசியமென சிரேஷ்ட பொறியிலாளர் ம.இராமதாசன் கூறியுள்ளார். Jaffna Water Issue Engineer Warn Sri Lanka Tamil News

அதுமட்டுமன்றி யாழ். குடாநாடு முழுவதும் நீரில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக கட்டப்படும் கட்டடங்கள் காரணமாக நிலத்தடி நீர் இல்லாமல் போகும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சுமார் 40 குளங்கள் காணப்பட்ட யாழ்ப்பாணத்தில் 4 குளங்கள் முற்றாக அழிவடைந்துள்ளதாகவும் ஏனைய குளங்களும் அழிவடைந்து வருவதாகவும் பொறியிலாளர் இராமதாசன் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், உரிய அதிகாரிகள் தலையிட்டு இவ்விடயம் தொடர்பாக நடவடிக்கை எடுக்காவிட்டால் பாரிய அனர்த்தத்திற்கு யாழ்ப்பாணம் முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுமென அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சட்டவிரோத கட்டடங்களால் வாய்க்கால்கள் மூடப்பட்டு நீர் வழிந்தோட முடியாமல் உள்ளதை அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். யுத்தம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக, உரிய நியமங்கள் இன்றி இவ்வாறு பல கட்டடங்கள் கட்டப்படுதால் இந்த நிலை ஏற்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

விரைவில் பேஸ்புக் பாவனைக்கு இலங்கையில் தடை!

பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள தயார்! மஹிந்த அறிவிப்பு!

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைக்கு அதிகாரம் கோருகிறது இராணுவம்!

25 ஆயிரம் வீடுகளை அமைக்கும் வேலைத்திட்டம்! அமைச்சர் சஜித்!

மகிந்தவை காப்பாற்றியது நல்லாட்சியே! மங்களசமரவீர கருத்து!

Tamil News Live

Tamil News Group websites