ரஷ்யாவிடம் ஆயுதம் வாங்கினால் பொருளாதார தடை; அமெரிக்கா இந்தியாவுக்கு எச்சரிக்கை

0
618
Forgo transactions Russia face sanctions US

இந்தியா-ரஷ்யா இடையே எஸ்-400 ஏவுகணைக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ள நிலையில் இந்தியாவை எச்சரிக்கும் தொனியில் நட்பு நாடுகளுக்கு அமெரிக்கா பொருளாதார தடை எச்சரிக்கை விடுத்துள்ளது. (Forgo transactions Russia face sanctions US)

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், இரு நாட்கள் பயணமாக இந்தியாவுக்கு இன்று விஜயம் செய்துள்ளார்.

இருநாட்டுத் தலைவர்கள் இடையே நடைபெறும் இந்திய – ரஷ்ய வருடாந்த சந்திப்பில் பங்கேற்பதற்காக வருகைதரும் அவர், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசவுள்ளார்.

புடினின் இந்தப் பயணத்தின் போது ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 விமான எதிர்ப்பு ஏவுகணைகள் வாங்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் மதிப்பு 36,792 கோடி ரூபா. இந்த ஏவுகணை வாங்கப்பட்டால், சீன எல்லையில் இந்தியாவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பல மடங்கு வலுவடையும்.

இது ரஷ்யாவின் அதி நவீன ஏவுகணையாகும். 400 கிலோ மீற்றர் சுற்றளவில் எதிரி நாட்டு ஏவுகணைகளை வான் வெளியில் இடை மறித்து தாக்கக்கூடிய ஆற்றல் இந்த ஏவுகணைக்குவுள்ளது. இந்த ரக ஏவுகணைகளில் 5 வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது.

அவற்றில் இரண்டு பாகிஸ்தான் எல்லைகளிலும், இரண்டு சீன எல்லையிலும் நிலைநிறுத்தி மீதமுள்ள ஒன்றை தலைநகர் டெல்லியில் நிலை நிறுத்த அரசு தீர்மானித்துள்ளது.

புடின் மற்றும் பிரதமர் மோடி சந்திப்பின் போது இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் வெளியுறவு கொள்கை ஆலோசகர் யுரி உசாகோவ் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்களை கொள்முதல் செய்யும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்க உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கினாலும் இந்த தடை விதிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா ரஷ்யா இடையே இன்று அல்லது நாளை எஸ் 400 ஏவுகணைக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ள நிலையில், இந்தியாவை எச்சரிக்கும் தொனியில் நட்பு நாடுகளுக்கு அமெரிக்கா இந்த எச்சரிக்கை விடுத்துள்ளதாக கருதப்படுகின்றது.

ஏற்கெனவே ஈரான் மீது விதிக்கப்பட்ட் பொருளாதார தடையினால் அந்த நாட்டிடம் இருந்து மசகு எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என இந்தியாவிற்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்துவரும் நிலையில், பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த எஸ்400 ஏவுகணை ஒப்பந்தத்தை எதிர்த்து அமெரிக்க எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; Forgo transactions Russia face sanctions US