மார்பகப் புற்றுநோயால் மரணிக்கும் பெண்களின் எண்ணிக்கை எதிர்வரும் 4 ஆண்டுகளுக்குள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்படுவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. Increase number women die breast cancer
முன்னணி ஆராய்ச்சி தொண்டு நிறுவனமான ‘Breast Cancer Now’ வெளியிட்ட கணிப்புகளின்படி தற்போதைய போக்குகள் தொடருமேயானால் 2022 ஆம் ஆண்டில் மார்பகப் புற்றுநோய் காரணமாக மரணிக்கும் பெண்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரிக்கக் கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரசாங்கம் முறையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான உயிரிழப்புக்களைத் தடுப்பதற்கு இது ஒரு அரிய சந்தர்ப்பம் என இத்தொண்டு நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
ஆராய்ச்சிகளில் காணப்படும் முன்னேற்றம் மற்றும் தேசிய சுகாதார சேவையின் (NHS) இன் கணிசமான முதலீடு காரணமாக 1989 இல் 15625 ஆக இருந்த மார்பகப் புற்றுநோயால் மரணிக்கும் பெண்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து தற்போது 11500 ஆக காணப்படுகிறது.
ஆனாலும் இங்கிலாந்தில் அதிகரித்து வரும் வயதான மக்கள் தொகை மற்றும் உடற்பருமன் அதிகரிப்பு காரணமாக 2035 ஆம் ஆண்டளவில் உயிரிழப்புகள் எண்ணிக்கை 12000 ஆக உயர்வதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக இத்தொண்டு நிறுவனத்தின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
மார்பகப் புற்றுநோய் இங்கிலாந்தின் மிகப் பொதுவான புற்றுநோயாகும். ஒவ்வொரு ஆண்டிலும் கிட்டத்தட்ட 50000 பெண்களும் 350 ஆண்களும் இந்நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
இருந்த போதிலும் உயிர்பிழைப்பு விகிதத்தில் மற்றைய ஐரோப்பிய நாடுகளான சுவிட்சர்லாந்து, ஜேர்மனி, சுவீடன், போர்த்துக்கல், பிரான்ஸ் மற்றும் மோல்டாவை விட இங்கிலாந்து பின்தங்கியுள்ளது.
இது குறித்து Breast Cancer Now இன் தலைமை நிர்வாகி டெலைத் மோர்கன் கருத்து தெரிவிக்கையில் மார்பகப் புற்றுநோயால் ஏற்படும் உயிரிழப்புக்களின் எண்ணைக்கை அதிகரிப்பு மிகவும் கவலையளிக்கிறது. ஆனாலும் முறையான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் நாம் இதைத் தடுக்க முடியும். அரசாங்கம் மேலும் அதிகமான ஆராய்ச்சிகளில் முதலீடு செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
சமூக மற்றும் பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் இது குறித்து கூறுகையில் புற்றுநோய் தடுப்பு அரசாங்கத்தின் முன்னுரிமைகளில் ஒன்றாகும். நாங்கள் மேலும் பல நடவடிக்கைகளை வருங்காலங்களில் முன்னெடுக்க வேண்டும். இதற்கு ஆரம்பக்கட்டமாக இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை (NHS) புற்றுநோய் தடுப்பு சேவைகளை புனரமைக்கும் பொருட்டு 600 மில்லியன் பவுண்ட்ஸ்களை முதலீடு செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
tags :- Increase number women die breast cancer
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
********************************************
- இங்கிலாந்து மக்களை அதிர்ச்சியிலும், பிரமிப்பிலும் ஆழ்த்திய இளவரசி மேகனின் செயல்
- லண்டனில் ‘ஓஸியானியா’ ஓவிய கண்காட்சியில் தனியாக கலந்துகொண்ட மேகன்
- லண்டனில் $50 millionற்கு மேல் ஏலம் போகும் இளஞ்சிவப்பு வண்ண வைரம்
- பிரித்தானியா கால்வாயில் கண்டெடுத்த ஆயுதக் குவியல்
- அக்காவின் திருமணத்தில் தங்கை செய்த காரியம்
- இங்கிலாந்தின் 2018ஆம் ஆண்டுக்கான சிறந்த இசை தொகுப்பிற்கான விருது !