நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் காணப்படவில்லை. எதிர்கால அச்சுறுத்தல்களுக்கு இராணுவம் தயாராக இருக்கின்றது. அத்துடன் நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான பொறுப்பு இராணுவத்திடம் உள்ளதாக இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். Army Commander Mahesh Senanayake Speech Sri Lanka News
கண்டி தலதா மாளிகையில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வழிபாட்டு நிகழ்வைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
வடக்கு மாகாணத்திலிருந்து இராணுவத்தை அகற்றவேண்டும் என்று தமிழ்த் தலைமைகளும் புலம்பெயர் அமைப்புக்களும் கோருவது இன்னொரு போரை ஆரம்பிப்பதற்காகவே.
ஆனால் அங்குள்ள தமிழ் மக்களில் 80 சதவீதமானோர் இராணுவம் வெளியேறுவதை விரும்பவில்லை.
நாட்டில் இராணுவம், கடற்படை மற்றும் வான்படை ஆகியவை வலுவான படைகளாக உள்ளன. நாட்டில் போருக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்த சக்திகள், நாட்டின் பாதுகாப்புச் சூழ்நிலை தொடர்ப்பிலும் நன்கு அறிந்திருப்பதாகத் தான் நம்புகின்றேன் என கூறியுள்ளார்
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு!
ஐ.நா வில் கடைசி நேரத்தில் உரையை மாற்றிய மைத்திரிபால!
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் சம்பந்தனுக்கு வாக்குறுதி!
சிறையில் போடவா பாதுகாப்பு பற்றி கரிசனை? மகிந்த அதிரடி கருத்து!
ரஜமஹா விகாரை அரை நிர்வாண படங்கள்! மூவர் கைது!
சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு!