விரைவில் தலைமன்னார் – இராமேஸ்வரம் பயணிகள் கப்பல் சேவை! அமைச்சர் ஜோன் அமரதுங்க!

0
529

தலைமன்னார் – இராமேஸ்வரம் பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகள் குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக, சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். Rameswaram – Mannar Ship Service Sri Lanka Tamil News

யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த உலக சுற்றுலா நாள் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். இந்த நிகழ்வில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் கலந்து கொண்டார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில் ,

வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள், நாட்டுக்குத் திரும்பி, வடக்கின் சுற்றுலாத் துறையில் முதலீடு செய்ய வேண்டும்.

வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளும் போது, புலம்பெயர் தமிழர்களைச் சந்திக்கும் போது, அவர்களைத் திரும்பி வருமாறு அழைப்பு விடுக்கிறேன்.

அது அவர்களுக்கும், அவர்களின் சமூகத்துக்கும் உதவியாக இருக்கும். வடக்கு மாகாணத்துக்கு சுற்றுலாத்துறை ஒரு முக்கிய வாய்ப்பாக இருக்கிறது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு!

ஐ.நா வில் கடைசி நேரத்தில் உரையை மாற்றிய மைத்­தி­ரி­பால!

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் சம்பந்தனுக்கு வாக்குறுதி!

சிறையில் போடவா பாதுகாப்பு பற்றி கரிசனை? மகிந்த அதிரடி கருத்து!

ரஜமஹா விகாரை அரை நிர்வாண படங்கள்! மூவர் கைது!

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு!

Tamil News Live

Tamil News Group websites