ஆசிய கிண்ணம் யாருக்கு? இறுதிப்போட்டியில் களமிறங்குகிறது இந்தியா மற்றும் பங்களாதேஷ்

0
539
asia cup final 2018 india vs bangladesh

ஐக்கிர அரபு இராச்சியத்தில் கடந்த 15ம் திகதி முதல் இடம்பெற்றுவரும் ஆசியக் கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதிப் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.இந்தப் போட்டியில் இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதவுள்ளன. asia cup final 2018 india vs bangladesh,tamil sports,Asia Cup Final,Tamil News

இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகள் ஆசியக் கிண்ண கிரிக்கட் தொடரில் இதுவரை 10 முறை மோதியுள்ளன.அவற்றில் 9 முறை இந்திய அணி வென்றுள்ள நிலையில், பங்களாதேஷ் அணி ஒருமுறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

ஆசியக் கிண்ணத் தொடரில் இதுவரை 6 தடவைகள் கிண்ணம் வென்றுள்ள இந்திய அணி, இந்த முறை 7 ஆவது தடவையாக கிண்ணத்தை வெல்லும் முயற்சியில் களமிறங்க உள்ளது.அத்துடன், விராட் கோலி இல்லாமல் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி கிண்ணத்தை கைப்பற்றும் எதிர்ப்பார்ப்புடன் பங்களாதேஷை எதிர்கொள்ள உள்ளது.

இதேநேரம், பங்களாதேஷ் அணி, ஆசியக் கிண்ண கிரிக்கட் தொடரில் முன்னதாக 2 தடவைகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியபோதும், அந்த அணி கிண்ணத்தை வென்றிருக்கவில்லை.இந்த நிலையில், இந்தமுறை மூன்றாவது தடவையாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள பங்களாதேஷ் அணி, கிண்ணத்தை வெல்வதற்காக கடும் பிரயத்தனங்களை மேற்கொள்ளும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

asia cup final 2018 india vs bangladesh

Tamil News Group websites

Tags: tamil sports news,tamil cricket news,today sports updates,tamil news sports,more sports news