தோனியிடம் திட்டு வாங்கிய குல்தீப்: காரணம் இதுதான்..!

0
595

ஆப்கானிஸ்தான் உடனான போட்டியில் பீல்டிங் செட் செய்வதில் ஓவராக பேசிய குல்தீப்பை, கேப்டன் தோனி எச்சரித்த வீடியோ வைரலாகி வருகிறது. dhoni warns kuldeep wanted change field setting,ind vs afg,asia cup 2018,tamil news

ஆசியக் கோப்பைத் தொடரில், நேற்று நடைபெற்ற போட்டியில், இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் மோதின.இதில், இந்திய அணி ஏற்கனவே இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்று விட்டதால், இந்தப் போட்டியில் கேப்டன் ரோஹித் ஷர்மா, தவான், பும்ரா மற்றும் புவனேஸ்வர் குமார் உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டிருந்தது.இதனால், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, மீண்டும் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

இந்திய அணி பந்துவீச்சின் போது, சுழற்பந்து வீச்சாளர் குல்தீப், கேப்டன் தோனி நிறுத்திய பீல்ட் செட்டிங்கை விரும்பாமல், தோனியிடம் பீல்டிங் செட்டிங்கை மாற்ற வேண்டும் என குல்தீப் சற்று அப்செட்டாக கூறியுள்ளார். அப்போது தோனி, பீல்டிங்கை மாற்றமால் மாறாக குல்தீப்பிடம், பந்து வீசிறிய இல்ல பவுலர மாத்தவ என ஒரே வரியில் பதிலளித்து அவரை அப்படியே ஆப் செய்தார். குல்தீப்பும் மறுப்பு பேசாமல் வாயை மூடிக்கொண்டு, பந்துவீசி சென்றார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

dhoni warns kuldeep wanted change field setting

Tamil News Group websites

Tags: tamil sports news,tamil cricket news,today sports updates,tamil news sports,more sports news