மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால்தான், மாநிலம் வளர்ச்சி பெறும் என்பதால் மட்டும்தான் மத்திய அரசுடன் இணக்கமாகச் செயல்படுகிறோம். அரசியல், கொள்கை ரீதியாக அ.தி.மு.க-வுக்கும் பா.ஜ.க-வுக்கும் வேறுபாடு உள்ளது. அந்தக் கொள்கைகளில் சமரசம் என்பதற்கே இடம் கிடையாது” என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.compromise bjp – minister kadambur raju india tamil news
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பல்வேறு திட்டப்பணிகள் மற்றும் திட்டங்கள் தொடங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் கடம்பூர் ராஜு, பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இலங்கைப் போரின்போது அப்போதைய மத்திய அரசான காங்கிரஸ், மாநில அரசான தி.மு.க ஆகியவை எடுத்த தவறான நிலைப்பாட்டின் காரணமாக, நமது தொப்புள்கொடி உறவான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு, அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா கண்டனத்தைத் தெரிவித்தார்.
இலங்கை ராணுவத்துக்கும் புலிகள் இயக்கத்துக்கும் இடையே நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின்போது காங்கிரஸ் தலைமையிலான அப்போதைய மத்திய அரசு தங்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கியது என இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சே, டெல்லியில் நடைபெற்ற விழாவில் ஒப்புதல் வாக்குமூலமாகவே தெரிவித்துள்ளார். இந்த உண்மைகளை மக்களுக்குத் தெரிவிக்கும் வகையில்தான் அ.தி.மு.க பொதுக்கூட்டங்களை நடத்துகிறது.
நாட்டை மோடியால்தான் காப்பாற்ற முடியும் எனக் கடந்த தேர்தலில் கூறி, வைகோ கூட்டணி வைத்து பிராசாரம் செய்தார். அப்படி இருந்தும் தமிழகத்தில் 37 இடங்களில் அ.தி.மு.க வெற்றி பெற்றது. மத்தியில் பா.ஜக அரசு அமைய என்றுமே எந்த விதத்திலும் அ.தி.மு.க அரசு அனுசரணையாக இல்லை. மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால்தான், மாநிலம் வளர்ச்சி பெறும் என்பதால் மட்டும்தான் மத்திய அரசுடன் இணக்கமாகச் செயல்படுகிறோம். அரசியல், கொள்கை ரீதியாக அ.தி.மு.க-வுக்கும் பா.ஜ.க-வுக்கும் வேறுபாடு உள்ளது. அதில் விட்டுக் கொடுக்க முடியாது. அந்தக் கொள்கைகளில் சமரசம் என்பதற்கே இடம் கிடையாது.
ஸ்டெர்லைட் ஆலை இயங்க வேண்டாம் என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு. அதற்கான அரசாணையும் அரசு வெளியிட்டு, ஆலைக்கு சீல் வைத்து நிரந்தரமாக முடக்கியதும் அரசுதான். தற்போதும் ஆலையை ஆய்வு செய்ய தீர்ப்பாயம் அமைத்த குழு வரக்கூடாது என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது மூடப்பட்டதுதான். இதில் அரசு தன் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது” என்றார்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- பூதக்கண்ணாடியை வைத்துப்பார்த்தாலும் அதிமுக ஆட்சியில் ஊழலை கண்டுபிடிக்க முடியாது! – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!
- 2 வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது? – விளக்கம் கேட்கும் உயர் நீதிமன்றம்!
- எம்.எல்.ஏ பதவியிலிருந்து கருணாஸை தகுதிநீக்கம் செய்யுங்கள்! – சபாநாயகரிடம் மனு!
- தமிழத்தில் 3 நாட்களுக்கு மழை! – இன்றைய வானிலை முன்னறிவிப்பு!
- போலி ஆவணங்கள் மூலம் தொழிலதிபர்களை ஏமாற்றிய தம்பதி கைது!
- சிலை கடத்தல் வழக்கை விசாரிக்க முடியாது… கை விரித்தது சிபிஐ… – தமிழக அரசு அதிர்ச்சி!
- மக்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையுள்ள அமைப்பு இடதுசாரி அமைப்பு தான்! – லெனின்பாரதி பேச்சு!
- ரஃபேல் விவகாரத்தில் இன்னும் 3 மாதங்களுக்குள் பூகம்பம் வெடிக்கும்! – ராகுல்காந்தி!
- தூத்துக்குடி மாணவி சோபியா மனித உரிமை ஆணையத்தில் ஆஜர்…!
- கருணாஸை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு! – நீதிமன்றத்தில் போலீசார் மனு!
- முத்தத்திற்கு ஆசைப்பட்டு நாக்கை பறிகொடுத்த கணவர்..!