சச்சின், தோனிக்குப் பிறகு விளையாட்டுத்துறையில் இந்தியாவின் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல்ரத்னா விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார் இந்திய கிரிக்கெட் அணிக் கேப்டன் விராட் கோலி.இந்நிலையில் தந்தையின் மரணம்தான் என்னை மாற்றியமைத்தது என இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி உருக்கமாகத் தெரிவித்துள்ளார். virat kohli recalls heartbreaking moment father passed away,today sports updates,about tamil cricket news,tamil news
ராஜீவ் காந்தி கேல்ரத்னா விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டு அவருக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ள நிலையில், நேஷனல் ஜியோகிராபிக் சேனல் `மெகா ஐகான்ஸ்’ என்ற பெயரில் இந்திய ஜாம்பவான்களின் வாழ்க்கையை ஆவணப் படமாக எடுத்துள்ளது. இதில் பேசியுள்ள விராட் கோலியும் தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைப் பகிர்ந்துள்ளார். அப்போது தனது 16 வயதில் அவரின் தந்தை பிரேம் பிரிந்தது குறித்து உருக்கமாகக் கூறியுள்ளார் கோலி. அதில், “2006-ம் ஆண்டு கர்நாடக அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பையில் 40 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தேன். அன்றைய நாள் ஆட்டம் குறித்து அணியுடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினேன். மறுநாள் ஆட்டத்துக்கு முன்பாக வீட்டுக்குச் சென்றிருந்தேன். அப்போது அதிகாலை 3 மணி இருக்கும்.
என் தந்தைக்கு கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டது. அவர் வலியால் துடித்தார். தெரிந்த மருத்துவர்களை உதவிக்காக அழைத்தோம். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை உதவிக்காக அழைத்தோம். இரவு நேரம் என்பதால் எங்களுக்கு உதவிக் கிடைக்கவில்லை. ஒருவழியாக ஆம்புலன்ஸ் வந்துசேர்ந்தது. ஆனால், அதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது. என் கைகளிலேயே என் தந்தையின் உயிர் பிரிந்தது. தந்தையின் மரணத்துக்குப் பிறகுதான் கிரிக்கெட்டில் அதிக கவனம் செலுத்தினேன். எனது மற்ற ஆசைகளை மூட்டைகட்டி வைத்துவிட்டு தந்தையின் கனவை நனவாக்க வேண்டும் என்று முழு ஆற்றலுடன் போராடினேன்” என உருக்கமாகத் தெரிவித்துள்ளார். தந்தையின் மரணத்துக்கு மறுநாள் ரஞ்சிக்கோப்பையில் விளையாடிய கோலி அந்த ஆட்டத்தில் 90 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
virat kohli recalls heartbreaking moment father passed away
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags: tamil sports news,tamil cricket news,today sports updates,tamil news sports,more sports news