சித்தராமையா மீண்டும் முதலமைச்சராக வேண்டும் ; காங்கிரஸ் வலியுறுத்தல்

0
430
Back Chief Minister siddaramaiah Congress MLA Interview

சித்தராமையா மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் யஷவந்த்ராயகவுடா பட்டீல் வலியுறுத்தியுள்ளார். (Back Chief Minister siddaramaiah Congress MLA Interview)

விஜயாபுரா மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் யஷவந்த்ராயகவுடா பட்டீல் விஜயாப்புராவில் ஊடகவியலாளர்களுக்கு இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், கர்நாடகத்தில் இந்த கூட்டணி ஆட்சியில் மாநிலத்தில் வளர்ச்சி பணிகள் எதுவும் நடைபெறவில்லை. அலமட்டி அணை நிரம்பியது. ஆனால் முதலமைச்சர் குமாரசாமி அந்த அணைக்கு பாகின பூஜை செய்யவில்லை.

இத்தகைய உணர்வுப்பூர்வமான விஷயங்களை முதலமைச்சர் அலட்சியப்படுத்துவதால், வட கர்நாடகத்தில் தனி மாநில குரல் எழுகின்றது. கர்நாடகம் எப்போதும் அகண்ட கர்நாடகமாக இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம்.

கூட்டணி ஆட்சியில் முதலமைச்சர் குமாரசாமி அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் நம்பிக்கையை பெற்று நிர்வாகத்தை நடத்த வேண்டும். கர்நாடகத்தின் இன்றைய நிலைக்கு தொங்கு சட்டசபையே காரணம் ஆகும்.

முன்னர் சித்தராமையா முதலமைச்சராக இருந்தபோது வளர்ச்சி பணிகள் வேகமாக நடந்தன. இப்போது அந்த வேகம் குறைந்துவிட்டது. இந்த அம்சங்களை எல்லாம் இன்று பெங்களூருவில் நடைபெறும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் எடுத்துக் கூறுவேன்.

சித்தராமையா மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் விரும்புகிறார்கள். நான் அமைச்சர் பதவியை எதிர்நோக்கியுள்ளேன். வாரிய தலைவர் பதவி வழங்கினாலும் பரவாயில்லை. ஒபரேஷன் தாமரையில் நான் விழ மாட்டேன். நான் சாகும் வரை காங்கிரசிலேயே நீடிப்பேன். வேறு கட்சிகளுக்கு செல்லும் திட்டம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; Back Chief Minister siddaramaiah Congress MLA Interview