ஜனாதிபதி அமெரிக்கா பயணமானார்

0
544
President traveled America
Sri Lanka's main opposition presidential candidate Maithripala Sirisena waves after voting in the country's election at a polling station in the north-central town of Polonnaruwa, some 240 kms from Colombo on January 8, 2015. Sri Lanka went to the polls on January 8 in its tightest election in decades, with its strongman president battling for survival after accusations of corruption and a failure to bring about national reconciliation. AFP PHOTO / ISHARA S. KODIKARA (Photo credit should read Ishara S.KODIKARA/AFP/Getty Images)

ஐக்கிய நாடுகள் சபையின் 73 வது பொது கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன நேற்று (22) உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு அமெரிக்கா சென்றுள்ளார். President traveled America

ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி, ஐக்கிய நாடுகள்சபையின் பொதுச் சபை கூட்டத்தொடரில் உரையாற்றும் நான்காவது சந்தர்ப்பம் இதுவாகும்.

“ஐக்கிய நாடுகள் சபையை அனைத்து மக்களுக்கும் இணக்கமானதாக ஆக்குதல்: அமைதியும், நேர்மையும் மற்றும் பேண்தகு தன்மையும் கொண்ட சமூகங்களுக்கான பூகோள தலைமைத்துவமும் பகிர்ந்த பொறுப்புக்களும்”

என்ற கருப்பொருளின் கீழ் ஐ. நா பொதுச் சபையின் 73 வது கூட்டத்தொடர் நியுயோர்க் நகரில் உள்ள ஐ. நா தலைமையகத்தில் இடம்பெறவுள்ளது.

இதன் பிரதான கூட்டத்தொடர் செப்டெம்பர் மாதம் 25 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், அன்றைய தினம் பிற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, கூட்டத்தொடரில் தனது விசேட உரையை நிகழ்த்தவுள்ளார்.

இதன் போது, இலங்கை இராணுவத்திற்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து – அவர்களை விடுவிப்பதற்கான யோசனைகளை முன்வைக்கப் போவதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஏற்கனவே கூறியிருந்தார்.

நியூயோர்க்கிற்கான இந்தப் பயணத்தின் போது, பக்க நிகழ்வாக, சில உலகத் தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்தவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன திட்டமிட்டுள்ளார்.

மேலும் ஐ,நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ், கொமன்வெல்த் அமைப்பின் செயலாளர் நாயகம் பற்றீசியா ஸ்கொட்லன்ட், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பசெலெட் உள்ளிட்டோரையும் சந்தித்துப் பேச அவர் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

tags :- President traveled America

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

தமிழ் இளைஞர்களை பாலியல் வன்கொடுமை செய்த சிங்கள பெண் இராணுவ அதிகாரிகள்!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு பிரான்ஸ் நாட்டின் அதி கௌரவ விருது!

ஆவா குழுவை இரண்டே நாட்களில் அழிப்போம்! மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி!

பாணின் விலையை 5 ரூபாவால் குறைக்க தீர்மானம்!

டிசம்பர் வரை எரிபொருள் விலை அதிகரிக்குமாம்! ராஜித சேனாரத்ன தெரிவிப்பு!

பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவை கைது செய்யுமாறு அழுத்தம்!

Tamil News Live

Tamil News Group websites