சவுதி தொலைக்காட்சியில் செய்தி வாசித்த முதல் பெண்

0
348
first woman read news Saudi television

சவுதியில் பெண்களை தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்களாக பணியாற்ற அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. first woman read news Saudi television

வளைகுடா நாடான சவுதி அரேபியாவில் பெண்களுக்கு பலவித கட்டுப்பாடுகள் உள்ளன. இளவரசர் முகமது பின் சல்மான் ஆட்சி பீடமேறிய பின் விஷன் 2030 என்ற பெயரில் சவுதி அரேபிய சமூகத்தை நவீனமயமாக்கும் நோக்கில் வாகனங்களை ஓட்ட பெண்களுக்கு இருந்த தடையை நீக்கினார்.

இந்நிலையில் அல் சவுதியா தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக வீம் அல் தஹீல் (Weam al Dakeel) என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.

மாலை நேரத்தில் மாத்திரம் வீம் ஆண் வாசிப்பாளருடன் இணைந்து செய்தி வாசிக்க அந்நாட்டு அரசு அனுமதியளித்துள்ளது.

இளவரசர் முகமது பின் சல்மானின் இத்தகைய சீர்திருத்தங்களுக்கு பல்வேறு நாடுகளிலுள்ள பெண்கள் வரவேற்பு அளித்துள்ளார்கள்.

மேலும் விஷன் 2030 திட்டத்தின் கீழ் இளவரசர் இன்னும் பல புரட்சிகரமான திட்டங்களுக்கு அனுமதியளிப்பார் என சவுதி பெண்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

tags :- first woman read news Saudi television

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

எமது ஏனைய தளங்கள்