கருணாஸ் என்ன பேசினார் என்று எனக்கு தெரியாது, ஆனால் ஜாதிகளை மறக்கும் இந்த நேரத்தில் அதனை விளையாட்டாகக் கூட பயன்படுத்தக்கூடாது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி நிறுவன தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். (Kamal Haasan comments Karunas opinion India Tamil News)
சென்னை விமான நிலையத்தில் வைத்து ஊடகவியலாளர்களிடம் நடிகர் கமல்ஹாசன் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
கருணாஸ் என்ன பேசினார் என்று எனக்கு தெரியாது. ஜாதிகளை மறக்கும் இந்த நேரத்தில் என்னைப் பொறுத்தவரை அதை விளையாட்டாக கூட பயன்படுத்தக்கூடாது. கருணாஸ் அதற்கு மன்னிப்பு கேட்டிருக்கிறார். அதிலும் ஒரு நியாயம் இருக்கிறது.
ஜாதியைப் பற்றி பேசும் காலம் முடிந்து விட்டது. என்னைப் பொருத்த வரை அதைப்பற்றி பேசவே கூடாது.
எந்த தேர்தலாக இருந்தாலும் ஆயத்தம் இல்லாமல் எதனையும் செய்யக் கூடாது என்ற நம்பிக்கை உள்ளவன் நான். அது உள்ளூராட்சி தேர்தலாக இருந்தாலும் சரி, நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி. ஆயத்தம் இல்லாமல் செய்யக்கூடாது என்பதால் தான் எங்களுடைய பயிலரங்க திகதியை மாற்றி இருக்கிறேன்.
உள்ளூராட்சி தேர்தல் வரும்போது அதனைப் பற்றி பேசலாம். இவர்கள் நடத்தும் தேர்தலை வேடிக்கையாகத் தான் பார்க்க வேண்டும்.
நான் மக்களை சந்திக்க கிராமங்களுக்கு சென்றேன். அங்கு நாங்கள் நடத்தும் கூட்டத்துக்கு அனுமதி எளிதாக கிடைக்கவில்லை. அதனால் இடங்கள் மாற்றப்பட்டது.
மேடை அமைக்கும் பணிகளில் தாமதம் ஏற்பட்டது. ஆனாலும் மக்கள் திரளாக கலந்து கொண்டனர். மக்கள் சந்தோஷமாகவும், ஆச்சரியமாகவும் இருந்தார்கள்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கதையை ‘அயர்ன் லேடி’ என்ற பெயரில் அவருக்கு மரியாதை செய்யும் வகையில் கட்சியினர் படமாக எடுக்கிறார்கள்.
ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் 13 பேர் குண்டு பாய்ந்து தான் இறந்துள்ளனர். அதனைத் தான் நாம் கேள்வி கேட்க வேண்டும். அதனை விட்டுவிட்டு தொண்டு நிறுவனங்களுக்கு பண்ட் வந்ததா? செண்ட் வந்ததா? என்று கேட்டுக் கொண்டிருக்க முடியாது. குற்றத்திற்கு மன்னிப்பு கோர வேண்டிய நேரத்தில் குற்றத்தை மக்கள் பக்கமே திருப்பக்கூடாது.
ஊழலை ஒழிப்பது என்பதை ஆதாரங்களுடன் கையும் களவுமாக பிடிக்க வேண்டும். அதுதான் ஒரே வழி. ஆனால் ஊழல் செய்பவர்கள் சாதுரியமாக செய்வதால் ஆதாரங்களை திரட்டுவது கஷ்டமாக இருக்கிறது. ஊழலை ஒழிக்க முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள் முயன்று கொண்டே இருக்க வேண்டும் என்றும் நடிகர் கமலஹாசன் கூறியுள்ளார்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- பொதுமக்களோடு மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி..! (காணொளி)
- காவிரி ஆற்றில் கழிவுகள் கலப்பதை எதிர்த்த வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
- ராஜீவ் காந்தியை கொலை செய்ய இந்தியாவிற்கு வரவில்லை; சாந்தன்
- மும்பையில் சிஏஜி அலுவலக ஊழியர் ஆணவக் கொலை
- பெற்ரோல் விலை மீண்டும் உயர்வு
- 2 பிள்ளைகளை தவிக்க விட்டு கள்ளகாதலனுடன் தப்பியோடிய தாய்
- ஒடிசாவை தாக்கிய புயல்; 08 மாவட்டங்களில் வெள்ளம்
- நிலானிக்கு எதிரான முக்கிய ஆதாரங்களை வெளியிடுவேன்! – உயிரிழந்த காந்தியின் சகோதரர் பரபரப்பு பேட்டி!
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Tags; Kamal Haasan comments Karunas opinion India Tamil News, Tamil News Online, Today News in Tamil, Latest Tamil News, Tamil News Paper