உடல்நலக்குறைவால் வியட்நாம் அதிபர் மரணம்

0
353
death Vietnam President due ill health

வியட்நாம் அதிபர் டிரான் டாய் குவாங் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 61. கடந்த 2016 ஆம் ஆண்டு வியட்நாம் அதிபராக பதவியேற்ற குவாங், கடுமையான உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். death Vietnam President due ill health

இதையடுத்து, அந்நாட்டு இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த குவாங், இன்று காலை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியட்நாமின் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ட்ரான் டாய் குவாங், சட்டப்படிப்பில் பி.எச்.டி பட்டம் பெற்றவர் ஆவார்.

இவர் கடந்த 2006 முதல் 2011 வரை மக்கள் பாதுகாப்புத்துறையின் துணை மந்திரியாகவும், பின்னர் 2011 முதல் 2016 வரை அதே துறையில் மந்திரியாகவும் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

tags :- death Vietnam President due ill health

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

    ***************************************

எமது ஏனைய தளங்கள்